Thursday, October 17, 2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 15

1. கீழ்க்கண்டவற்றுள் கல்வெட்டோடு தொடர்வுடைய இலக்கியம்.

அ) மெய்க்கீர்த்தி
ஆ) கல்வெட்டு
இ) செப்பேடு
ஈ) நடுகல்

2. "திருபுவனச் சக்கரவர்த்தி " என்ற பட்டம் சூடியவர்.

அ) முதலாம் இராசராசன்
ஆ) இரண்டாம்இராசராசன்
இ) முதலாம் ராசேந்திரன்
ஈ) இரண்டாம்ராசேந்திரன்

3. சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.

கூற்று 1: புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் பொறிக்கப்பட்டவை மெய்கீர்த்திகள்.

கூற்று 2: முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் வடிக்கப்பட்டுள்ளன.

அ) கூற்று 1, 2 இரண்டும் சரி
ஆ) கூற்று 1, 2 இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

4. "கவிதை வாழ்க்கையின் திறனாய்வு " என்றவர்.

அ) ஆர்னால்டு
ஆ) எல்லிஸ்
இ) முருகானந்தம்
ஈ) வீ. அரசு

5. "மண்ணுள் வினைஞர் " என்பவர்.

அ) சிற்பி
ஆ) ஓவியர்
இ) நெய்பவர்
ஈ) வணிகர்

6. ஐம்பெரும் காப்பியம் முறைவைப்பு முறையை குறிப்பிடும் நூல்.

அ) திருத்தணிகையுலா
ஆ) மூவருலா
இ) கந்தர் அலங்காரம்
ஈ) தேவாரம்

7. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க

அ) உழவு , மண் , ஏர் , மாடு
ஆ) மண் , மாடு , ஏர் , உழவு
இ) உழவு, ஏர், மண், மாடு
ஈ) ஏர் , உழவு , மாடு , மண்

8. "தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்.


அ) மேம்பட்ட நிர்வாக திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்.

9. கீழ்க்கண்டவற்றுள் நாட்டியத்தோடு தொடர்புடையவர்

அ) பால சரஸ்வதி
ஆ) ராஜம் கிருஷ்ணன்
இ) சின்னப்பிள்ளை
ஈ) கிருஷ்ணம்மாள்

10. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) எம். எஸ். சுப்புலட்சுமி - தாமரைத்திரு
ஆ) பாலசரஸ்வதி - சாகித்திய அகாதெமி
இ) ராஜம் கிருஷ்ணன் – பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
ஈ) சின்னப்பிள்ளை – காந்தி அமைதி விருது.

No comments:

Post a Comment