1. கீழ்க்கண்டவற்றுள் முல்லைத் தினையோடு தொடர்புடையது.
அ) மீன்கோட்பறை
ஆ) ஏறுகோட்பறை
இ) தொண்டகம்
ஈ) துடி
2. மாதவி ஆடிய ஆடல்களில் ஒன்று.
அ) காவடியாட்டம்
ஆ) தேவராட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) குடக்கூத்து
3. கீழ்க்கண்டவற்றுள் மயிலாட்டத்தோடு தொடர்புடையது.
அ) ஜால்ரா
ஆ) நையாண்டி மேளம்
இ) உறுமி
ஈ) பறை
4. கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம்.
அ) காவடியாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) தேவராட்டம்
5. மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும். மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
6. ம.பொ.சிவஞானம் தனது உயரிய சொத்தாகக் கருதியது.
அ) பதவி
ஆ) பொருள்
இ) நூல்கள்
ஈ) பட்டம்
7. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கியவர்----- .
அ) விநாயகம்
ஆ) ரஷித்
இ) ம.பொ.சிவஞானம்
ஈ) மங்கலக்கிழார்
8. தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியை துறந்தவர்
அ) காமராஜர்
ஆ) இராஜாஜி
இ) அண்ணா
ஈ) எம்.ஜி. ஆர்
9. மொழி அடிப்படையில் முதன் முதல் பிரிந்த மாநிலம்.
அ) ஆந்திரா
ஆ) தமிழ்நாடு
இ) கேரளா
ஈ) குஜராத்
10. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைய பாடுபட்டவர்
அ) ந.முத்துசாமி
ஆ ) ஏ.நேசமணி
இ) மு.கருணாநிதி
ஈ) எவரும் இல்லை
Thursday, October 17, 2024
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 14
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment