Thursday, October 17, 2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 13

1. "நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் " என்றவர்.

அ) ம. பொ. சி 
ஆ ) ந. முத்துசாமி 
இ) திரு.வி. க 
ஈ) சா. கந்தசாமி

2. 'கற்பாவை ' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

அ) உமாமகேஸ்வரி 
ஆ) ம.பொ.சிவஞானம் 
இ) ந. முத்துசாமி 
ஈ) குமரகுருபரர்

3. சரியான வரிசையினைத் தெரிவு செய்க.

அ) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
ஆ) விரிசோதியின் தன்மேனியின் வெய்யோனொளி மறைய
இ) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
ஈ) தன்மேனியின் வெய்யோனொளி விரிசோதியின் மறைய

4. தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி---------------------

அ) ஜால்ரா 
ஆ) பறை 
இ) உறுமி 
ஈ) தவில்

5. "பைம்பொன் சும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாட" இவ்வடியில் ‘பண்டி’ என்பது.

அ) தலை 
ஆ) கால் 
இ) வயிறு 
ஈ) கண்

6. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் 
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சிப் புரிவதால் 
ஈ) அங்குவறுமை இல்லாததால்

17. பொருத்தி விடை தருக.

1) குறிஞ்சி i. வைகறை
2) முல்லை ii. யாமம்
3) மருதம் iii. எற்பாடு
4) நெய்தல் iv. மாலை

அ) (1) – (iv), (2) – (iii), (3) – (i), (4) – (ii)
ஆ) (1) – (ii), (2) – (iv), (3) – (i), (4) – (iii)
இ) (1) – (ii), (2) – (iv), (3) – (iii), (4) – (i)
ஈ) (1) – (iii), (2) – (i), (3) – (iv), (4) – (ii)

8. குளிர் காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்

அ) முல்லை , குறிஞ்சி , மருதம் நிலங்கள் 
ஆ) குறிஞ்சி , பாலை , நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி ,மருதம் ,நெய்தல் நிலங்கள் 
ஈ) மருதம் , நெய்தல் , பாலை நிலங்கள்.

9. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின்  செயப்பாட்டு வினைத்தொடர் எது ?

அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

10. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) குறிஞ்சி - காட்டாறு
ஆ) முல்லை - திருமால்
இ) நெய்தல் – முதலை சுறா
ஈ) பாலை - பஞ்சுரப்பண்

No comments:

Post a Comment