Saturday, September 21, 2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 01

1.”மன்னும் சிலம்பே மணிமேகலை வடிவே! , முன்னும் நினைவால் முடிதாழ  வாழ்த்துவமே!” என்னும் அடிகளுடன் தொடர்புடையவர்.

அ. தேவநேயப் பாவாணர் 
ஆ. க.சச்சிதானந்தன்
. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
ஈ. தமிழழகனார்

2. கீழ்க்காண்பவற்றுள் ’நல்ல’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்.

அ. நற்றிணை 
ஆ. குறுந்தொகை
இ. ஐங்குறுநூறு 
ஈ. பதிற்றுப்பத்து

3. பொருத்தி விடை தேர்க.

1) தாள் - i) கீரை, வாழை முதலியவற்றின் அடியைக் குறிக்கும் சொல்
2) தண்டு - ii) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடியைக் குறிக்கும் சொல்
3) கோல் - iii) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடியைக் குறிக்கும் சொல்
4) தூறு - iv) நெட்டி, மிளகாய்ச்செடிமுதலியவற்றின் அடியைக் குறிக்கும் சொல்

அ. 1) –ii), 2)– i), 3) – iv, 4) –iii 
ஆ) 1) –ii), 2)– iii), 3) – iv, 4) –i
இ)1) –iii), 2)– i), 3) – ii, 4) –iv 
ஈ) 1) –iii), 2)– iv), 3) – i, 4) –ii

4. கூற்று – 1 : விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.

கூற்று – 2 : உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.

அ. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு 
ஆ. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ. கூற்று 1,2 இரண்டும் சரி 
ஈ. கூற்று 1,2 இரண்டும் தவறு

5. கூற்று: தமிழ் சொல்வளம் உடையது என்றும் தமிழ்நாடு பொருள் வளம் உடையது என்றும் பாவாணர் கூறுகிறார்.

காரணம் : தமிழ்நாட்டு நெல்லில் செந்நெல், வெண்ணெல், கார் நெல், சம்பா எனப் பலவகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டு சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன.

(அ) கூற்று சரி, காரணம் தவறு 
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி 
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவற

6. கீழ்க்காண்பவற்றுள் தேவநேயப் பாவாணருடன் தொடர்பில்லாதது.


அ. சொல்லாய்வுக்கட்டுரைகள் 
ஆ. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி
இ. உலகத் தமிழ்க்கழகம் 
ஈ. திருவள்ளுவர் தவச்சாலை

7. பின் வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

(அ) கிளை – கொம்பின் பிரிவு
(ஆ) கொப்பு – குச்சியின் பிரிவு
(இ) சினை – கிளையின் பிரிவு
(ஈ) போத்து – சினையின் பிரிவு

8. பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தெரிவு செய்க.

(அ) அரும்பு – பூ விரியத்தொடங்கும் நிலை
(ஆ) போது – பூவின் தோற்ற நிலை
(இ) வீ – மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
(ஈ) செம்மல் – பூவின் மலர்ந்த நிலை

9. வள்ளுவர் கூறும் சிறந்த அமைச்சருக்கு உரிய பண்புகளை நிரல்படுத்துக.

(அ) குடிகாத்தல், வன்கண் ,கற்றறிதல், ஆள்வினை
(ஆ) குடிகாத்தல், கற்றறிதல், ஆள்வினை,வன்கண்
(இ) வன்கண், குடிகாத்தல், கற்றறிதல், ஆள்வினை
(ஈ) வன்கண், கற்றறிதல், ஆள்வினை, குடிகாத்தல்

10.சரியான வரிசையினைத் தெரிவு செய்க.

(அ) வருக என உரைத்தல், வியத்தல், நன்மொழி இனிது உரைத்தல், திருந்துற நோக்கல்,

(ஆ) வருக என உரைத்தல், திருந்துற நோக்கல், வியத்தல், நன்மொழி இனிது உரைத்தல்,

(இ) வியத்தல், திருந்துற நோக்கல், நன்மொழி இனிது உரைத்தல், வருக என உரைத்தல்

(ஈ) வியத்தல், நன்மொழி இனிது உரைத்தல், திருந்துற நோக்கல், வருக என உரைத்தல்

No comments:

Post a Comment