Monday, September 30, 2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 02

1. உலகிலேயே தமிழ் மொழிக்காக (ஒரு மொழிக்காக) மாநாடு நடத்திய முதல் நாடு

(அ) சிங்கப்பூர்
(ஆ) மலேசியா
(இ) தாய்லாந்து
(ஈ) இந்தியா

2. கீழ்க்காண்பவற்றுள் தமிழ்நாட்டில் அன்றி வேரெங்கும் விளையாத சிறுகூலம் அல்லாதது.

(அ) வரகு
(ஆ) காடைக்கண்ணி
(இ) குதிரைவாலி
(ஈ) சீரகச்சம்பா

3. கூற்று : நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவர்களாக இருந்திருக்கின்றனர்.

காரணம் : ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.

(அ) கூற்று சரி, காரணம் தவறு 
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி 
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

4. கூற்று 1 : போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவான ரோமன் எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.

கூற்று 2 : இது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரில் உள்ள செய்தி

(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு 
(ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
(இ) கூற்று 1,2 இரண்டும் சரி 
(ஈ) கூற்று 1,2 இரண்டும் தவறு

5. தமிழழகனார் இயற்றிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை.

(அ) பத்து 
(ஆ) பதினொன்று
(இ) பன்னிரண்டு 
(ஈ) பதின்மூன்று

6. சண்முகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்டவர்.

(அ) பெருஞ்சித்திரனார் 
(ஆ) பாவாணர்
(இ) எழில்முதல்வன் 
(ஈ) தமிழழகனார்

7. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர்.

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார் 
ஈ) நப்பூதனார்

8. பின்வருவனவற்றுள் பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்லாதது.

அ) நூறாசிரியம் 
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது 
ஈ) குருஞ்சிதிட்டு

9. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்பு.

அ) திருக்குறள் விளக்க உரை 
ஆ) திருக்குறள் மெய்ப்பொருள் உரை
இ) திருக்குறள் விளக்கம் 
ஈ) திருவருட்பா விளக்க உரை

10. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின் அடைமொழிகளின் முறையே

அ) நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
ஆ)ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
இ)ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்
ஈ)நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்,ஓங்கு

No comments:

Post a Comment