Monday, September 30, 2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 03

1. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.

(அ) பாவாணர்
(ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(இ) இரா.இளங்குமரனார்
(ஈ) க.சச்சிதானந்தன்

2. தமிழ்நாட்டில் விளைந்த சம்பாவில் உள்ள உள்வகைகளின் எண்ணிக்கை.

அ) 60
ஆ) 70
இ) 40
ஈ) 50

3. மெய்யெழுத்துகளுள் ஒற்று முழுவதும் அளபெடுக்காத இனம்.

(அ) வல்லினம்
(ஆ) மெல்லினம்
(இ) இடையினம்
(ஈ) ஆய்தம்

4. கீழ்க்காண்பவற்றுள் ஒற்று அளபெடுக்காத இடையின எழுத்துகள்.

(அ) ய்,ர்
(ஆ) ய்,ழ்
(இ) ர்,ழ்
(ஈ) ர்,ல்

5. இவற்றுள்முதனிலைத்தொழிற்பெயரைத்தெரிவுசெய்க.

அ) கெடுதல்
ஆ) கெடு
இ) கேடு
ஈ) கெட்டு

6. செய்யுளில், பெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது.

அ) இசைநிறை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) ஒற்றளபெடை

7. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர். – இத்தொடரில் பயின்று வந்துள்ள ஒன்று.

(அ) வினைமுற்று
(ஆ) வினையெச்சம்
(இ) தொழிற்பெயர்
(ஈ) வினையாலணையும் பெயர்

8. தவறான இணையைத் தெரிவு செய்க.

(அ) நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்
(ஆ) தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. மன்னன்
(இ)உலகின் மிகச்சிறிய தவளை - ச. முகமது அலி
(ஈ) பச்சை நிழல் – உதயசங்கர்

9. தவறான இணையைத் தெரிவு செய்க.

(அ) வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள்பெருக்கம் உண்டாம் – ஔவையார்
(ஆ) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் – சிலம்பு
(இ) வளி மிகின் வலி இல்லை – பலப்படடைச் சொக்கநாதப் புலவர்
(ஈ) நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! – புறம்

10. தவறான இணையைத் தெரிவு செய்க.

(அ) கிழக்கு – குடக்கு
(ஆ) மேற்கு – கோடை
(இ) வடக்கு – வாடை
(ஈ) தெற்கு – தென்றல்

No comments:

Post a Comment