Saturday, March 9, 2024

6TH TAMIL - அறிவியலால் ஆள்வோம்

1. ‘வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்’ என்று பாடியவர்.

அ) வாணிதாசன்
ஆ) சுரதா
) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

2உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
     உடலும் உயிரும் காக்கின்றான் - இப்பாடலில் இடம்பெற்ற அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

அ) மாற்றும் - மருத்துவம்
ஆ) உறுப்பை - உடலும்
இ)உடலும் உயிரும்
ஈ) இவை அனைத்தும்

3.  நீல வானின் மேலே பறந்து
    நிலவில் வாழ நினைக்கின்றான் - இப்பாடலில் இடம்பெற்ற அடிஎதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

அ) நீல - மேலே
ஆ) நீல - நிலவில்
இ) நிலவில் - நினைக்கின்றான்
ஈ) இவை அனைத்தும்

4. நீல வானின் மேலே பறந்து
    நிலவில் வாழ நினைக்கின்றான் - இப்பாடலில் இடம்பெற்ற சீர் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

அ) நீல - மேலே
ஆ) நீல - நிலவில்
இ) நிலவில் - நினைக்கின்றான்
ஈ) இவை அனைத்தும்

No comments:

Post a Comment