1. ‘மேரு’ எனக் குறிக்கப்பெறுவது
அ) பொதிகை மலை
ஆ) திருவண்ணாமலை
இ) இமயமலை
ஈ) மருதமலை
2. சிலப்பதிகாரத்தி இயற்றிய இளங்கோவடிகள்.
அ) சேர மரபைச் சார்ந்தவர்
ஆ) சோழ மரபைச் சார்ந்தவர்
இ) பாண்டிய மரபைச் சார்ந்தவர்
ஈ) குறுநில மன்னர் மரபைச் சார்ந்தவர்
3. சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம்.
அ) கிமு. முதல் நூற்றாண்டு
ஆ) கிபி. இரண்டாம் நூற்றாண்டு
இ) கிபி. மூன்றாம் நூற்றாண்டு
ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
4. தமிழில் தோன்றிய முதல் காப்பியம்.
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) நீலகேசி
5. கீழ்க்கண்டவற்றுள் சிலப்பதிகாரம் வாழ்த்தாத ஒன்று.
அ) மழை
ஆ) நிலவு
இ) ஞாயிறு
ஈ) வானம்
6. பொருள் தருக. - அளி
அ) நிலவு
ஆ) மகரந்தம்
இ) கருணை
ஈ) கடல்
7. பொருத்துக
அ) கொங்கு - 1. மலர்தல்
ஆ) அலர் - 2. சக்கரம்
இ) நாமநீர் - 3. மகரந்தம்
ஈ) திகிரி - 4. கடல்
அ) 3, 1, 2, 4
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 3, 4, 1
8. சிலப்பதிகாரம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) முதல் காப்பியம்
ஆ) குடிமக்கள் காப்பியம்
இ) இரட்டைக் காப்பியம்
ஈ) முத்தமிழ்க் காப்பியம்
9. ‘திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்’ என்று புகழப்படும் மன்னன்.
அ) சேர மன்னன்
ஆ) சோழ மன்னன்
இ) பாண்டிய மன்னன்
ஈ) குறுநில மன்னன்
10. கழுத்தில் சூடுவது.
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
No comments:
Post a Comment