Saturday, February 10, 2024

6TH TAMIL - கனவு பலித்தது (கடிதம்)

 1. உலகம் ஐம்பூதங்களால் ஆகியது எனக் கூறும் நூல்.

அ) முல்லைப் பாட்டு

ஆ) தொல்காப்பியம்

இ) அகத்தியம்

ஈ) புறநாநூறு

2. உலக உயர்களை முதன் முதலாக வகைப்படுத்தியவர்.

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) காக்கைபாடினியர்

ஈ) நக்கீரர்

3. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவு சுருங்காது என்று கூறியவர்.

அ) திருமூலர்

ஆ) ஔவையார்

இ) திருவள்ளுவர்

ஈ) பூதன்சாத்தனார்

4. போர்க்களத்தில் காயமுற்ற வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைக் கூறும் நூல்.

அ) நற்றிணை

ஆ) பதிற்றுப்பத்து

இ) கார்நாற்பது

ஈ) முல்லைப் பாட்டு

5. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியைக் கூறும் நூல்.

அ) நற்றிணை

ஆ) பதிற்றுப்பத்து

இ) கார்நாற்பது

ஈ) முல்லைப் பாட்டு

6. ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர், நாழி முகவாது நால் நாழி’ என்று பாடியவர்.

அ) கம்பர்

ஆ) ஔவையார்

இ) திருவள்ளுவர்

ஈ) திருமூலர்

7. ‘கடல் நீர் ஆவியாகி, மேகமாக மாறி, மழைபொழியும்’ என்று கூறும் பதிணென் மேற்கணக்கு நூல்.

அ) முல்லைப்பாட்டு

ஆ) திருக்குறள்

இ) கார்நாற்பது

ஈ) திருப்பாவை

8. கீழ்க்கண்டவற்றுள் கீழ்க்கணக்கு நூல் அல்லாத ஒன்று.

அ) முல்லைப்பாட்டு

ஆ) திருக்குறள்

இ) கார்நாற்பது

ஈ) பழமொழி நாநூறு

9. ‘நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்’ என்று கூறும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) கார்நாற்பது

இ) பதிற்றுப்பத்து

ஈ) நற்றிணை

10. ‘கடல்நீர் முகந்து கமஞ்சூழ் எழிலி’ என்ற அடி இடம் பெற்ற நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) கார்நாற்பது

இ) பதிற்றுப்பத்து

ஈ) நற்றிணை

11. ‘நெடு வெள்ளூசி நெடுவசி பரந்த வடு’ எனப் பாடும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) கார்நாற்பது

இ) பதிற்றுப்பத்து

ஈ) நற்றிணை

12. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின், முடிமுதிர் பரதவர்’ என வரும் அடிகளை உடைய நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) கார்நாற்பது

இ) பதிற்றுப்பத்து

ஈ) நற்றிணை

13. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கலீலியோ கோட்பாட்டை முன்பே கூறியவர்.

அ) திருமூலர்

ஆ) கபிலர்

இ) திருவள்ளுவர்

ஈ) தாயுமானவர்

14. திருக்குறளின் புகழைக் கூறும் நூல்.

அ) திருவள்ளுவக்கோவை

ஆ) திருவள்ளுவ மாலை

இ) பாவினச்செய்யுட்கோவை

ஈ) மாமூலம்

15. கீழ்க்கண்டவற்றுள் கடல்நீர் ஆவியாகும் எனக் கூறும் நூல்

அ) திருப்பாவை

ஆ) திருவெம்பாவை

இ) தேவாரம்

ஈ) திருவாசகம்

No comments:

Post a Comment