Friday, February 9, 2024

6TH TAMIL - வளர்தமிழ்

1. மனித இனம் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பு

அ) கணினி

ஆ) மொழி

இ) செயற்கைக்கோள்

ஈ) சுவை உணவு

2. மனிதர்களை பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்துவது.

அ) சிரிப்பு

ஆ) சிந்தித்தல்

இ) மொழி

ஈ) ஆளுமை

3. தமிழ் இலக்கியங்கள் பலவும்.

அ) பழமையானவை

ஆ) இனிமையானவை

இ) பண்பட்டவை

ஈ) சிறப்பானவை

4. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல், இனிதாவ தெங்கும் காணோம்’ என்று கூறியவர்.

அ) தாகூர்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

5. ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று பாடியவர்.

அ) கம்பர்

ஆ) தாயுமானவர்

இ) பாரதியார்

ஈ) நாவுக்கரசர்

6. தமிழில் நமக்குக் கிடைத்த பழமையான இலக்கண நூல்.

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) முத்துவீரியம்

ஈ) காக்கைபாடினியம்

7. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் எவ்வகை எழுத்துகளாக உள்ளன.

அ) வலஞ்சுழி

ஆ) இடஞ்சுழி

இ) இரண்டும்

ஈ) இவற்றுள் எதுவுமில்லை.

8. கீழ்க்கண்டவற்றுள் எவை இடஞ்சுழி எழுத்துக்கள்.

அ) க, ச, ட

ஆ) ட, ந, ப

இ) ட, ய, ழ

ஈ) வ, ழ, ற

9. ‘தமிழ்’ என்ற சொல் முதன் முதலில் எந்நூலில் காணப்படுகிறது.

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) தேவாரம்

10. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) தமிழ் -  தொல்காப்பியம்

ஆ) தமிழ்நாடு - சிலப்பதிகாரம்

இ) தமிழன் - அப்பர் தேவாரம்

ஈ) தமிழர் - திருக்குறள்

11. ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.

அ) வளமை

ஆ) செம்மை

இ) சீர்மை

ஈ) செழுமை

12. ‘பாகற்காய்’ - பிரித்து எழுதுக.

அ) பாகல் + காய்

ஆ) பாகு + அல்காய்

இ) பாகு + அல் + காய்

ஈ) பாகற் + காய்

12. ‘தமிழுன் கிளவியும் அதனோ ரற்றே’ என்ற அடி இடம்பெற்ற நூல்

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) இலக்கணவிளக்கம

13. ‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய, இதுநீ கருதினை ஆயின்’ என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்.

அ) புறநானூறு

ஆ) கலித்தொகை

இ) சிலப்பதிகாரம்

ஈ) தேவாரம்

14. ‘தமிழ், தமிழ்நாடு, தமிழன்’ என்ற சொற்கள் இடம்பெற்ற நூல்களை வரிசைப்படுத்துக.

அ) சிலப்பதிகாரம், தொல்காப்பியம், தேவாரம்

ஆ) தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தேவாரம்

இ) தேவாரம், சிலப்பதிகாரம், தொல்காப்பியம்

ஈ) தொல்காப்பியம், தேவாரம், சிலப்பதிகாரம்

15. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) தொல்காப்பியம், நன்னூல் - இலக்கண நூல்கள்

ஆ) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு - சங்க இலக்கியங்கள்

இ) சிலப்பதிகாரம், நீலகேசி - காப்பியங்கள்

ஈ) ஏலாதி, உலா, பிள்ளைத்தமிழ் - சிற்றிலக்கியங்கள்

16. பூவின் நிலைகள்.

அ) மூன்று

ஆ) ஐந்து

இ) ஏழு

ஈ) ஒன்பது

17. கீழ்க்கண்டவற்றுள் ‘மா’ என்ற சொல்லுக்கான பொருள் அல்லாத ஒன்றைக் கண்டறிக.

அ) பெரிய

ஆ) புல்

இ) வண்டு

ஈ) அளவு

18. பொருத்துக.

அ) மா - 1. தழை

ஆ) தாழை -  2. தோகை

இ) கரும்பு - 3. இலை

ஈ) மல்லி - 4. மடல்

அ) 1, 4, 2, 3

ஆ) 3, 4, 2, 1

இ) 3, 1, 4, 2

ஈ) 2,  4, 3, 1

19. பொருத்துக.

அ) பனை - 1. கூந்தல்

ஆ) கமுகு - 2. மடல்

இ) வரகு - 3. ஓலை

ஈ) கள்ளி - 4. தாள்

அ) 1, 4, 2, 3

ஆ) 3, 4, 2, 1

இ) 3, 1, 4, 2

ஈ) 2,  4, 3, 1

20. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ) வெள்ளித்திரை

ஆ) தொடுதிரை

இ) தேடுபொறி

ஈ) செயலி

21. மலர் வகைகளை வரிசைப்ப்படுத்துக.

அ) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

ஆ) மொட்டு, அரும்பு, முகை, அலர்,  மலர், வீ, செம்மல்

ஆ) முகை, மொட்டு, அரும்பு, மலர், அலர், வீ, செம்மல்

ஈ) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

22. ‘தமிழ் சொல் முதன்முதலாகக் கையாண்ட நூல்’ கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) வேளாண்மை - கலித்தொகை

ஆ) வெள்ளம் - குறுந்தொகை

இ) முதலை - நற்றிணை

ஈ) கோடை - அகநானூறு

23. ‘தமிழ் சொல் முதன்முதலாகக் கையாண்ட நூல்’ கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) உலகம் - திருமுருகாற்றுப்படை

ஆ) மருந்து - அகநானூறு

இ) அன்பு - திருக்குறள்

ஈ) ஊர் - தொல்காப்பியம்

24. ‘தமிழ் சொல் முதன்முதலாகக் கையாண்ட நூல்’ கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) அரசு - திருக்குறள்

ஆ) முடி - அகநானூறு

இ) மீன் - குறுந்தொகை

ஈ) புகழ் - தொல்காப்பியம்

25. ‘தமிழ் சொல் முதன்முதலாகக் கையாண்ட நூல்’ கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) செய் - குறுந்தொகை

ஆ) பார் - பெரும்பாணாற்றுப்டை

இ) ஒழி - தொல்காப்பியம

ஈ) மகிழ்ச்சி - சிலப்பதிகாரம்

26. ‘சக்கரைத் தமிழ் அள்ளி, தாலட்டு நாம் சொல்லி’ என்று பாடியவர்.

அ) மு. மேத்தா

ஆ) வைரமுத்து

இ)  அறிவுமதி

ஈ) 

27. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி எழுத்து அல்லாத ஒன்று.

அ)

ஆ) அ

இ) ண

ஈ) ஞ

28. ‘உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்’ என்றவர்.

அ) அறிவுமதி

ஆ) நா. முத்துக்குமார்

இ) முடியரசன்

ஈ) கண்ணதாசன்

No comments:

Post a Comment