1. நில அளவைக் குறிக்கும் சொல்.
அ) கேணி
ஆ) காணி
இ) தூணி
ஈ) சித்தம்
2. சுப்பிரமணியன் என்பது இவரின் இயற்பெயர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) வாணிதாசன்
3. இளமையிலேயே கவிபாடும் திறம் பெற்றவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) வாணிதாசன்
4. பாரதியாருக்குப் ‘பாரதி’ என்ற பட்டம் வழங்கியவர்
அ) எட்டையபுர மன்னர்
ஆ) சிங்கபுர மன்னர்
இ) சிவகங்கை மன்னர்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
5. கீழ்க்கண்டவற்றுள் பாரதியார் பாடாத ஒன்று.
அ) நாட்டு விடுதலை
ஆ) பெண் உரிமை
இ) மது ஒழிப்பு
ஈ) மண் உரிமை
6. கீழ்க்கண்டவற்றுள் பாரதியார் நூல்களுள் பொருந்தாத ஒன்று.
அ) பாஞ்சாலி சபதம்
ஆ) பாப்பாப் பாட்டு
இ) குயில் பாட்டு
ஈ) கண்ணன் பாட்டு
7. ‘சித்தம்’ என்பதன் பொருள்.
அ) மனம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
8. ‘மாளிகையின் அடுக்குகளைக் குறிக்கும் சொல்.
அ) கூடங்கள்
ஆ) மாடங்கள்
இ) சாளரங்கள்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
9. ‘கத்தும் குயிலோசை’ - இதில் அமைந்துள்ள வழு.
அ) இட வழு
ஆ) குண வழு
இ) மரபு வழு
ஈ) திணை வழு
10. எந்த ஓசை கேட்ட வேண்டுமென பாரதியார் விரும்பினார்.
அ) குரலோசை
ஆ) குயிலோசை
இ) மயிலோசை
ஈ) கிளியோசை
No comments:
Post a Comment