Monday, December 30, 2024

Public Exam: 10ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான சில டிப்ஸ்

ஒரு மதிப்பெண் வினாக்கள்: ஒரு மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை அனைத்துப் பாடங்களிலும் உள்ள சரியான விடையை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

பெரும்பாலும் 4,6,7,9,10 போன்ற பாடங்களிருந்து கணக்கு சார்ந்த வினாக்கள் கேட்கப்படுகின்றன. 4.6.7.9.10 பாடங்களில் உள்ள எடுத்துக்காட்டு கணக்கு. தீர்க்கப்பட்ட கணக்கு மற்றும் பயிற்சி கணக்கு போன்றவற்றை நன்கு பயிற்சி செய்யவும். வினா எண்: 19 (படம்). கட்டாய வினா: 22, 32. 12.1416.17 போன்ற உயிரியல் பாடங்களில் உள்ள படங்களின் பாகங்களை நன்றாக படிக்கவும்.

2,4 மதிப்பெண்கள்: 2.4 மதிப்பெண்களை பொறுத்தவரை விதிகள். வேறுபாடுகள்.வரையறை.பயன்கள்.பண்புகள் ஆகியவற்றை அனைத்து பாடங்களிலும் பட்டிய லிட்டு படிக்கவும். இதன் மூலம் 5 முதல் 6 வினாக்க்ளுக்கு விடையளிக்கலாம்.

7 மதிப்பெண்கள்: 7 மதிப்பெண்கள் வினாக்களை பொறுத்தவரை.1.2.4.5 மதிப் பெண்களின் வினாக்கள் கலந்துகேட்கப்படுகின்றுன. எனவே, 2,4 மதிப்பெண் வினாக்களை கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

மெல்ல கற்கும் மானவர்களுக்கான குறிப்பு: மாணவர்கள் அறிவியல் பாடத்தில் எளிமையாக தேர்ச்சி பெற 1.2.4 மதிப்பெண் வினாக்களை மட்டும் கவனம் செலுத்தி படிக்கவும் அல்லது-1.2.4.5.7.11,12,14,16.17.20 போன்ற பாடங்களில் உள்ள வினாக்களை மட்டும் படிக்கவும்.

75/75 மதிப்பெண் பெற: அறிவியல் பாடத்திற்கான ப்ளு பிரிண்ட் அரசு தேர்வு இயக்குநரகத்தால் வெளியிடவில்லை. எனவே. 75/75 மதிப்பெண் பெற கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வு வினா, இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வு போன்ற அனைத்து வினாக்களையும் நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

Post Comments

No comments:

Post a Comment

Back To Top