1. சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.
கூற்று 1: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன்கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்
கூற்று 2: மெய்யிற் பொடியும் விரிந்த கருங்குழலும் என்ற பாடல் இதற்குச் சான்றாகும்.
அ) கூற்று 1, 2 இரண்டும் சரி
ஆ) கூற்று 1, 2 இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
2. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) வெட்சிப் பூ
ஆ) நொச்சி ப்பூ
இ) நெய்தல் பூ
ஈ) வாகைப் பூ
3. பொருத்தி விடை தருக.
1) நொச்சி i. கோட்டையைக் காக்கப் போரிடல்
2) தும்பை ii. கோட்டையைக் கைப்பற்ற போரிடல்
3) உழிஞை iii. நாட்டைக் கைப்பற்ற போரிடல்
4) வஞ்சி iv. வலிமை காரணமாகப் போரிடல்
அ) (1) – (iv), (2) – (iii), (3) – (i), (4) – (ii)
ஆ) (1) – (ii), (2) – (iv), (3) – (i), (4) – (iii)
இ) (1) – (ii), (2) – (iv), (3) – (iii), (4) – (i)
ஈ) (1) – (iii), (2) – (i), (3) – (iv), (4) – (ii)
4. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) நண்பகல் - பகல் 10 மணி முதல் 2 மணிவரை
ஆ) வைகறை – இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை
இ) காலை – காலை 6 மணிமுதல் 10 மணிவரை
ஈ) எற்பாடு - இரவு 10 மணிமுதல் 2 மணிரை
5. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) குளிர்
ஆ) யாமம்
இ) வைகறை
ஈ) மாலை
6. சரியான வரிசையைத் தேர்வு செய்க.
அ) வறுமை இல்லையால் ஓர் வண்மை இல்லை
ஆ) வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்
இ) இல்லை வண்மை ஓர் வறுமை இல்லையால்
ஈ) வறுமை இல்லை ஓர் வண்மை இல்லையால்
7. கீழ்க்கண்டவற்றுள் அயோத்தியா காண்டத்தில் அமைந்துள்ள படலம்
அ) நாட்டுப்படலம்
ஆ) கங்கைபடலம்
இ) கங்கைகாண் படலம்
ஈ) வதைபடலம்
8. சிலப்பதிகாரத்தில் ‘தொண்டி’ என்னும் பகுதி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) திருச்சி
ஆ) இராமநாதபுரம்
இ) சேலம்
ஈ) கரூர்
9. ‘சிலம்புச் செல்வர்’ எனப்போற்றப்படுபவர்.
அ) கி. வ. ஜ.
ஆ) உ. வே. சா
இ) ம. பொ. சி
ஈ) திரு. வி. க
10. சரியான வரிசையைத் தேர்வு செய்க.
அ) ஆரமும் அகிலும் தூசும் துகிரும்
ஆ) தூசும் துகிரும் அகிலும் ஆரமும்
இ) தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
ஈ) துகிரும் தூசும் ஆரமும் அகிலும்
No comments:
Post a Comment