Saturday, May 4, 2024

10TH TAMIL - எழுத்து, சொல்

1. சார்பெழுத்துகள் --------------- வகைப்படும்

அ) 2
ஆ) 10
இ) 12
ஈ) 18

2. உயிரளபெடை ------------- வகைப்படும்.

அ) 2
ஆ) 3
இ) 5
ஈ) 5

3. சூடு – இச்சொல் ------------ தொழிற்பெயர் ஆகும்.

அ) தொழிற்பெயர்
ஆ) முதனிலைத்தொழிற்பெயர்
இ) எதிர்மறைத்தொழிற்பெயர்
ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

4. இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.

அ) கெடுதல்
ஆ) கெடு
இ) கேடு
ஈ) செல்லாமை

5. செய்யுளில் ஓசை குறையாத விடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை.

அ) இன்னிசை
ஆ) சொல்லிசை
இ) இசைநிறை
ஈ) ஒற்றளபெடை

6. அளபெடை என்பதன் பொருள்.

அ) குறுகிஒலித்தல்
ஆ) நீண்டுஒலித்தல்
இ) திரிதல்
ஈ) ஓசைமாறுபடாதுஒலித்தல்

7. மொழி -------------- வகைப்படும்.

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5

8. ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை.

அ) 8
ஆ) 9
இ) 10
ஈ) 11

9. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை -------- என்பர்.

அ) செய்யுளிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) ஒற்றளபெடை

10. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர்.

அ) இசைநிறை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) ஒற்றளபெடை

11. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ---.

அ) இசைநிறை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) ஒற்றளபெடை

12. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, மெய்யெழுத்துகள் அளபெடுத்தலை -------- என்பர்.

அ) செய்யுளிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) ஒற்றளபெடை

13. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது ----------

அ) தனிமொழி
ஆ) தொடர்மொழி
இ) பொதுமொழி
ஈ) மூவகை மொழி

14. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது.

அ) தனிமொழி
ஆ) தொடர்மொழி
இ) பொதுமொழி
ஈ) மூவகை மொழி

15. எட்டு, வேங்கை – இச்சொற்கள் ----------க்குச் சான்றுகள் ஆகும்.

அ) தனிமொழி
ஆ) தொடர்மொழி
இ) பொதுமொழி
ஈ) மூவகை மொழி

16. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்.

அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்
இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
ஈ) வினையாலணையும் பெயர்

17. எதிர்மறைப் பொருளில் வரும் தொழிற்பெயர்.

அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்
இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

18. நடவாமை, கொல்லாமை – இச்சொற்களில் வரும் தொழிற்பெயர்.

அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்
இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

19. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல்.

அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்
இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

20. தட்டு, உரை, அடி - இச்சொற்களில் வரும் தொழிற்பெயர் ----------

அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
ஆ) முதல்நிலைத்திரிந்த தொழிற்பெயர்
இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
ஈ) எதிர்மறைத்தொழிற்பெயர்

21. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேரொரு பயனிலையைக் கொண்டு முடிவது.

அ) தொழிற்பெயர்
ஆ) பண்புப்பெயர்
இ) வினையாலணையும் பெயர்
ஈ) சினைப்பெயர்

22. தொழிற்பெயர் ----------- இடத்திற்கு மட்டும் உரியது.

அ) தன்மை
ஆ)முன்னிலை
இ) படர்க்கை
ஈ) மூவிடம்

23. ’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

அ) பாடிய; கேட்டவர்
ஆ)பாடல்; பாடிய
இ) கேட்டவர் ; பாடிய
ஈ) பாடல் ; கேட்டவர்

No comments:

Post a Comment