Friday, April 5, 2024

பொது அறிவு வினா விடை - 01


லைசோசோம் என்னும் நொதியைக் கண்டறிந்தவர் யார்?
அலெக்ஸாண்டர் பிளமிங்

வளர்ந்த மனிதனின் சிறுநீரில் உள்ள யூரியாவின் நிறை எவ்வளவு?
30 கி

வன்சோப்புகள் என்பது என்ன?
உயர் கொழுப்புகளின் சோடிய உப்புக்கள்

வாகனங்களில் எதிர்தாக்கியாகச் செயல்படும் காரீய சேர்மம் எது?
காரிய டெட்ரா எத்தில்

வாகனங்களின் வெப்பம் வீசியில் நீர் உறைந்துவிடாமல் தடுக்கப் பயன்படுவது எது?
ப்ரஸ்டோன்

வேதியியல் காரணிகள் என்றழைக்கப்படுபவை எவை?
வாயுக்கள், ஊட்டப் பொருட்கள்

வேதியியலில் பொருளின் அளவைக் குறிக்கும் அடிப்படை எஸ்.ஐ.அவகு எது? 
மோல்

வேர் முண்டுகளில் நைட்ரஜனை சேகரிக்கும் இரண்டு தாவரங்களைக் கூறுக
துவரை, உளுந்து

வைட்டமின் ஈ குறைவால் உண்டாகும் நோய் எது?
மலட்டுத்தன்மை

வைட்டமின் கே குறைவால் உண்டாகும் நோய் எது?
ரத்தப்போக்கு

ஷெல்லாக் ஆல்கஹாலில் கரைந்த கரைசல் எப்படி அழைக்கப்படும்?
சாராய வார்னிஷ்

மண்புழுவின் அண்டக்குழல்கள் உடற்கண்டத்தின் எந்தப் பகுதியில்  திறக்கின்றது?
14வது

மண்புழுவின் அண்டகங்கள் எந்த உடற்கண்டத்தில் உள்ளது? 
13வது

மண்புழுவின் உடற்கண்டங்களில் காணப்படும் நீட்சி எது? 
சீட்டே

புறாவின் இறகுகளின் மூன்று வகைகள் எவை?
நீளிறகுகள், இழை இறகுகள், உருவ இறகுகள்

புறாவின் உடல் முழுவதும் எதனால் ஆனது? 
சிறகுகளால்

ஹார்ன் சில்வர் என்பதன் வேதியில் பெயர் என்ன?
வெள்ளி குளோரைடு

ஸ்கேலார் அளவைக்கு இரு எடுத்துக்காட்டுகள் எவை? 
நிறை, காலம்

ஃப்ளுரைடு நீக்கியாகப் பயன்படுபவை எவை?
ரேசின்கள்

சமுத்திரகுப்தரது அவைக்கவிஞர் யார்? 
ஹரிசேனர்

சாகாரி என்றழைக்கப்பட்டவர் யார்?
இரண்டாம் சந்திரகுப்தர்

அக்பர் உருவாக்கிய அழகிய நகரம் எது? 
பதேபூர் சிக்ரி

அக்பர் ஏற்படுத்திய மதம் எது ?
தீன் இலாஹி

அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது? 
லீலாவதி

அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?
தான்சேன்

அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
மன்சப்தாரி முறை

அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
மத சகிப்புத் தன்மை

சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
வான சாஸ்திரம்

செங்கோட்டை எங்குள்ளது?
டில்லி

அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
அர்ஜுன்சிங்

அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
அபுல்பாசல்

அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன? 
குப்தர்கள் காலத்தில்

அஜந்தா ஓவியங்களில் சிறந்தவை எவை?
இறக்கும் இளவரசி, தாயும் சேயும்

ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள் எங்குள்ளன?
சிருங்கேரி, துவாரகா, பூரி, பத்ரிநாத்

ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
நாலாயிர திவ்ய பிரபந்தம்

இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
சமுத்திரகுப்தர்

இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
யானை

இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன? 
சார்கோலெம்மா

வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
கார காரீய கார்பனேட்

வெனிலாவின் பிறப்பிடம் எது ?
மெக்சிகோ

வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது? 
வெள்ளி புரோமைடு

வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது? கார்போரண்டம்

கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்? 
மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கவிராஜா என்ற பட்டப்பெயரைப் பெற்ற மன்னன் யார்? 
சமுத்திரகுப்தர்

கஜினி முகமதுவின் அவையிலிருந்த கணித மேதை யார்? 
அல்பருணி

காளிதாசரின் புகழ்பெற்ற நாடகம் எது?
சாகுந்தலம்

கிருஷ்ண தேவராயர் இயற்றிய நூல்கள் எவை? 
உஷா பரிணயம், ஜாம்பவாதி கல்யாணம்


அமில மழை என்பது என்ன?
கந்தக அமிலம் நீருடன் கலந்து வெளியேறுவது

அமீபா எந்த வகையான உணவை உட்கொள்ளும்? 
விலங்கு வகை

அமீபிக் சீதபேதியை உண்டுபண்ணும் உயிரி எது?
என்டமீபா ஹிஸ்டோலிடிகா

அல்னாவின் மேல் நுனியில் காணப்படும் நீட்சி எது?
ஒலிக்ரேனன்

குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்

கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக

சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
அத்வைதம்

சந்திரகுப்த விக்கிரமாதித்தியர் தனது தலைநகரத்தை பாடலிபுத்திரத்திலிருந்து எந்த நகரத்திற்கு மாற்றினார்?
உஜ்ஜைனி

இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
50 சதவிகிதம்

Post Comments

No comments:

Post a Comment

Back To Top