Wednesday, March 13, 2024

6TH TAMIL நூலகம் நோக்கி...

1. அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள இடம்.

அ) திருச்சி
ஆ) சென்னை
இ) கோவை
ஈ) நெல்லை

2. ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது  பெரிய நூலகம்

அ) மறைமலையடிகள் நூலகம்
ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
இ) பாவாணர் நூற்றாண்டு நூலகம்
ஈ) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

3. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள இடம்.

அ) இந்தியா
ஆ) சீனா
இ) இலங்கை
ஈ) பாக்கிஸ்தான்

4. ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்.

அ) இரா. அரங்கநாதன்
ஆ) அரங்க. சீனிவாசன்
இ) கபிரியேல் நோடே
ஈ) மறைமலையடிகள்

5. ‘எஸ். ஆர். அரங்கநாதன் விருது’ யாருக்கு வழங்கப்படுகிறது.

அ) சிறந்த வாசிப்பாளருக்கு
ஆ) சிறந்த நூலகருக்கு
இ) சிறந்த நூலாசிரியருக்கு
ஈ) சிறந்த அச்சகத்தாருக்கு

6. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம் எங்கு உள்ளது.

அ) தரைத் தளம்
ஆ) இரண்டாம் தளம்
இ) ஆறாம் தளம்
ஈ) எட்டாம் தளம்

7. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி நூல்கள் அமைந்துள்ள தளம்.

அ) தரைத் தளம்
ஆ) முதல் தளம்
இ) ஆறாம் தளம்
ஈ) எட்டாம் தளம்

8. பொருத்துக

அ) முதல் தளம் - 1. தமிழ் நூல்கள்
ஆ) இரண்டாம் தளம் 2. சட்டம், பொருளியல்
இ) மூன்றாம் தளம் 3. குழந்தைகள் பிரிவு
ஈ) நான்காம் தளம் 4. தத்துவம், அரசியல்

அ) 3, 4, 2, 1 
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3

9. பொருத்துக

அ) ஐந்தாம் தளம் - 1. வரலாறு, சுற்றுலா
ஆ) ஆறாம் தளம் 2. நூலக நிர்வாகப் பிரிவு
இ) ஏழாம் தளம் 3. வேளாண்மை, திரைப்படக்கலை, பொறியியல்
ஈ) எட்டாம் தளம் 4. கணிதம், அறிவியல், மருத்துவம்

அ) 3, 4, 2, 1 
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3

10. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஓலைச்சுவடிகள்’ பிரிவு எத்தளத்தில் உள்ளது.

அ) முதல் தளம்
ஆ) ஐந்தாம் தளம்
இ) ஏழாம் தளம்
ஈ) எட்டாம் தளம்

No comments:

Post a Comment