அ) உயிர் எழுத்துகள்
ஆ) மெய் எழுத்துகள்
இ) உயிர்மெய் எழுத்துகள்
ஈ) ஆயித எழுத்து
2. உயிர் எழுத்துகளிர் எத்தனை மொழி முதலில் வரும்.
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) பன்னிரண்டு
ஈ) மூன்று
3. எல்லா உயிர் எழுத்துகளுடனும் சேர்ந்து மொழி முதலில் வரும் எழுத்துகள்.
அ) க, ங, த, ந, ப, ம
ஆ) க, ச, த, ந, ப, ர
இ) க, ச, த, ந, ப, ம
ஈ) க, ச, ஞ, த, ந, ப, ம
4. கீழ்க்கண்டவற்றுள் மொழி முதலில் வாரா எழுத்துகள்.
அ) ஞ, ஞா, ஞெ, ஞொ
ஆ) ர, ரா, ரௌ
இ) ய, யா, யு, யூ, யோ, யௌ
ஈ) வ, வா, வி, வீ, வெ, வே, வை
5. மொழி முதலிலும் இறுதியிலும் வாரா எழுத்து
அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆயுத எழுத்து
ஈ) அனைத்தும்
6. மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகள்
அ) ஆறு
ஆ) பதினொன்று
இ) பதிமூன்று
ஈ) பதினெட்டு
7. சரியான கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 சொல்லின் இறுதியில் உயிர் எழுத்துகள் தனித்து வருவதில்லை.
கூற்று 2 உயிர் எழுத்துகள் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின இறுதியில் வரும்.
அ) கூற்று 1 மற்றும் 2 சரி
ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
8. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைக் கண்டறிக
அ) ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்
ஆ) உயிர் எழுத்துகள் சொல்லில் இடையில் வரும்
இ) அளபெடையின் போது மெய் எழுத்துகள் மூன்று இடங்களிலும் வரும்
ஈ) மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்
9. உயிர்மெய் எழுத்துகளுள் சொல்லின் இறுதியில் வரா எழுத்து.
அ) ங
ஆ) ஞ
இ) நொ
ஈ) அனைத்தும்
10. மொழி இறுதியில் வாரா உயிரெழுத்து வரிசை.
அ) அகர வரிசை (க - ன)
ஆ) உகர வரிசை ( கு - னு)
இ) எகர வரிசை ( கெ - னெ)
ஈ) ஒகர வரிசை ( கொ - னொ)
No comments:
Post a Comment