Monday, July 17, 2023

மறைந்திருக்கும் ரகசியம் : பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா..?


நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். உடனடியாக மீண்டும் வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மீண்டும் நம் வேலையை தொடர்வோம்.

பூனை நமது இடபுற பாதையை மறைத்து வடபக்கமாகப் போவதுதான் பொதுவாக அபசகுனமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. மேலும் பூனையால் பல நல்ல பலன்களும் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பூனை ஒரு வீட்டிற்குள் குட்டி போட்டால்., அது நல்லது வீட்டில் செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் பார்வையும் நிலையும் நன்றாக இருக்கவில்லை என்றால், அவர் வீட்டில் பூனையை வளர்ப்பது நல்ல பரிகாரமாகக் கருதப்படுகின்றது.

அதேபோன்று, வீட்டில் பூனை முடியை சிவப்பு துணியில் கட்டி உடன் வைத்திருந்தால், காலசர்ப தோஷம், கண் திருஷ்டி மற்றும் பில்லி சூனியம் நீங்கும் என்று கூறப்படுகிறது. பூனைகள் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடிப்பது, உங்கள் பண வருவாய்க்கான ஒரு அறிகுறியாகும்.

பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்:

அந்த காலத்தில் தெருவிளக்கு கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். குதிரை வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூர பயணமாக இருந்தால் கட்டாயம் இரவு நேர பயணம் என்பது இருக்கும்.

இப்படி இருட்டு சமயத்தில் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ நாம் பயணம் செய்யும்போது எதிரே வரக்கூடிய பூனை, வண்டியை ஓட்டி செல்பவர்களுடைய கண்களுக்கு தெரியாது.

பூனையின் கண்கள் மட்டும் தான் இருட்டில் தனியாக தெரியும். அதாவது பொதுவாகவே பூனையின் கண்ணை இருட்டில் பார்க்கும் போது ஒரு "ரேடியம் எஃபெக்டில்" நமக்கு தெரியும். பூனையின் உருவம் இருட்டில் தெரியாது. ஆனால் லைட் போட்டு வைத்திருப்பது போல இரண்டு கண்களும் அப்படியே மின்னும்.

பூனைக்கு மட்டும் கண்கள் இப்படி இருக்காது. புலி, சிறுத்தை, சிங்கம், கருஞ்சிறுத்தை இப்படி எல்லா வகையான காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படிதான் ரேடியம் மின்னுவது போல தெரியும். ஆங்கிலத்தில் இந்த மிருகங்களை "Big Cats" என்று சொல்லுவார்கள். இப்படி பூனையின் கண்களை பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து மிரண்டு விட கூடாது.

அதாவது எதிரே வருவது பூனை என்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது. இருட்டில் பூனையின் கண்களை பார்த்து, காட்டு விலங்குகள் தான் எதிரே வருகின்றது என்ற அச்சத்தில் குதிரையும் மாடும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால், சிறிது நேரம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரைக்கும் மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்வார்களாம்.

இதனால், வண்டியை ஓட்டி செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தை தொடர்வார்கள்.

இந்தப் பழக்கம் தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுனம். தண்ணீர் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய ஜனங்க மாத்தி வச்சுட்டாங்க.

உங்களுக்கும் இப்படிப்பட்ட மூட பழக்க வழக்கங்களின் மீது நம்பிக்கை இருந்தால், இனி பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ஆதலால் இனி நாம வெளியே எங்கேயாவது போகும்போது பூனை குறுக்கே போனா "போகாதீங்கன்னு" யாராவது உங்களை தடுத்தா சொல்லுங்க "பூனையும் வெளியே எங்கேயோ போகுதுன்னு" சொல்லுங்க.

Post Comments

No comments:

Post a Comment

Back To Top