பலரும் தங்களது ஆளுமைப் பண்புகளை வித்தியாசமான வழிகளில் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். தான் எந்த வகையான நபர், தங்களது பலம் மற்றும் பலவீனம், குணநலன்கள் என தங்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் உங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதற்காக சுவாரசியமான வழியை இங்கே கொண்டு வந்துள்ளோம். இங்கே நீங்கள் பார்க்க போகும் பர்சனாலிட்டி டெஸ்ட்டிற்கு 5 வெவ்வேறு ஜன்னல்கள் அடங்கிய இமேஜை கொடுக்கிறோம். உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் இமேஜில் இருந்து ஏதாவது ஒரு ஜன்னலின் இமேஜை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் உங்களை பற்றி உங்களுக்கு தேவையான ஆளுமை பண்புகள் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆளுமைப் பண்புகளை தெரிந்து கொள்ள உதவும் இமேஜ் கீழே:

ஜன்னல் நம்பர் 1:

மேலே நீங்கள் பார்த்த இமேஜில் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஜன்னல் தான் உங்கள் சாய்ஸ் என்றால், நீங்கள் ஒரு உள்முக சிந்தனையாளராக இருக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மிகவும் மென்மையான இதயம் படைத்தவர். பொய் மற்றும் மோசடிகளை உங்களால் தாங்கி கொள்ள முடியாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். ,உயர்ச்சிகளில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள்.உங்களது நற்குணம் மற்றும் கனிவான உள்ளம் காரணமாக நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.நீங்கள் அடிக்கடி சிந்தனையில் மூழ்கிவிடும் நபராக, நிகழ்காலத்தில் இருந்து தொலைந்து விடும் நபராக இருப்பீர்கள்.
ஜன்னல் நம்பர் 2:

உங்களது தேர்வு இரண்டாம் நம்பர் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஜன்னல் என்றால், நீங்கள் இந்த உலகில் மற்ற எல்லாவற்றையும் விட உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நபராக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.வெளியிடங்களுக்கு சென்றாலும் கூட வீட்டு நினைவாகவே இருப்பீர்கள். இயல்பிலேயே நீங்கள் போட்டித்தன்மை கொண்டவர் என்றாலும் நேர்மை மற்றும் ஒழுக்கமானவராக இருப்பீர்கள். எனினும் நீங்கள் கொஞ்சம் சென்சிட்டிவான நபர், இதுவே உங்களது பலமாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
ஜன்னல் நம்பர் 3:

3-ஆம் நம்பர் ஜன்னலை தேர்வு செய்திருந்தால் நீங்கள் ஒரு சுதந்திர பறவையை போல் வாழ்வதையே விரும்புகிறீர்கள். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருப்பீர்கள்.பெரும்பாலும் நீங்கள் தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறீர்கள். எதிலும் சிறந்து விளங்கும் திறமை உங்களிடம் இருக்கும் அதே சமயம் வாழ்க்கையை திட்டமிட்டு நடத்துவதில் அக்கறை மற்றும் கவலை இல்லாதவராக நீங்கள் இருக்கிறீர்கள். நெருக்கமானவர்களிடம் விசுவாசமாக இருக்கும் நீங்கள் அவர்களிடம் இருந்தும் அதையே எதிர்பார்ப்பீர்கள்.
ஜன்னல் நம்பர் 4:

4-ஆம் நம்பர் ஜன்னலை நீங்கள் தேர்வு செய்திருந்தால் நீங்கள் ஒரு வேடிக்கையான மற்றும் வினோதமான நபராக இருப்பீர்கள். விசித்திர தன்மைகள் நிறைந்த ஒரு அசாதாரண ஆளுமை உங்களிடம் காணப்படும். நீங்கள் இயல்பிலேயே கிரியேட்டிவ் மற்றும் சென்சிட்டிவான நபர். உங்களுக்குள் இருக்கும் உயர்ந்த ரசனை மற்றும் வித்தியாசமாக சிந்திக்கும் திறன் உள்ளிட்டவற்றால் பிறரை எளிதில் கவர்வீர்கள். பெரும்பாலும் நம்பிக்கையுடன் இருக்கும் நீங்கள் எப்போதும் பாசிட்டிவாக சிந்திப்பீர்கள், பிறருக்கு ஊக்கமாக இருப்பீர்கள்.
ஜன்னல் நம்பர் 5:

உங்களது தேர்வு 5-ஆம் நம்பர் ஜன்னல் என்றால் நீங்கள் புதிய நபர்களை சந்திப்பதிலும், வெளியிடங்களுக்கு சென்று புதிய அனுபவங்களை பெறுவதிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருப்பீர்கள். உங்களிடம் சிறந்த தலைமைத்துவ திறன் மட்டும் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இக்கட்டான சூழலிலும் கூட உங்களது முடிவுகள் சரியானதாக இருக்கும். நீங்கள் நேர்மையானவர் மட்டும் பிறரிடமிருந்து உரிய மரியாதையை எதிர்பார்க்க கூடியவர். ஒரு உதவியை எப்போது கேட்க வேண்டும், எப்போது பிறருக்கு உதவ வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள்.
No comments:
Post a Comment