Monday, December 2, 2024

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்று கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.

இதனால், அப்பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. அந்த வகையில், தற்போது அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, புயல் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், (02.12.2024) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

எனவே, “பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதா? மின் கசிவு ஏதேனும் உள்ளதா?” என்பதை ஆய்வு செய்ய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Back To Top