
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல் வழங்கி முற்றோதல் பயிற்சி அளிப்பதற்காக, வலைத்தமிழ், வள்ளுவர் குறள்குடும்பம் மற்றும் சர்வீஸ் 2 சொசைட்டி அமைப்பினர் இணைந்து “உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம்” என்ற அமைப்பினை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினர்.
உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் புரவலர் ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்செல்வன் துரைசாமி அவர்களின் ஏற்பாட்டில் மண்டலப் பயிற்சியாளர் திருக்குறள் காமராசு ஐயா நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், தொ.சேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2022-இல் திருக்குறள் முற்றோதல் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.
இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி P.தியாகச்சுடர், திருக்குறள் காமராசு ஐயாவிடம் தொடர்ந்து இணையவழியில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி எடுத்து, கடந்த 12 டிசம்பர் 2024 அன்று நாமக்கல் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் பிழையின்றி ஒப்புவித்து மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார்.
இது போன்று பல மாணவர்களை உருவாக்கி வரும் பயிற்சியாளர் திருக்குறள் காமராசு ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தொடர் முயற்சிக்கான வெற்றி இது. இந்த அமைப்பை கருவாக்கி உருவாக்கிய வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ஐயா, வள்ளுவர் குறள்குடும்பத்தின் திரு சி.இராஜேந்திரன் IRS ஐயா மற்றும் S2S அமைப்பின் திரு.இரவி சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளோம். 🙏
மாணவியை ஊக்குவித்த பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி து.ஜோதிகண்மணி, ஆசிரியர்கள் திருமதி.செல்வி, திருமதி. சிவகாமி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும், மாணவியின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!
No comments:
Post a Comment