🌸 'முகவுரை' என்பது அரசியலமைப்பின் அறிமுகம் அல்லது முன்னுரையைக் குறிக்கிறது.
🌸இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டுள்ளது.
🌸இந்திய அரசியலமைப்பிற்கு முகவுரை தேவை என்று கூறியவர் - ஜவஹர்லால் நேரு.
🌸 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட குறிக்கோள் தீர்மானமே... 1947 ஜனவரி 22-ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நமது முகப்புரையாக மாறியது.
🌸 முதன் முதலில் முகவுரையை அரசியலமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா (அமெரிக்க மாதிரி)
🌸 இந்தியா உட்பட பல நாடுகள் இந்த முகவுரை அம்சத்தை தங்களது அரசியலமைப்பில் பின்பற்றின.
🌸 முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குடியரசு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துகள் 1789 பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டது.
🌸 சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி போன்ற கருத்துக்கள் (1917 ரஷ்ய அக்டோபர் புரட்சி) சோவியத் ரஷ்யாவிடம் இருந்து எடுக்கப்பட்டது
🌸 முகவுரை நீதிப்புனராய்வுக்கு அப்பாற்பட்டதால் நீதிமன்றத்தின் மூலம் முகவுரைக்கு தீர்வு காண இயலாது
🌸 முகவுரையின் அடிப்படை கட்டமைப்பை எவ்விதத்திலும் சிதைக்காமல் விதி-368 பயன்படுத்தி சட்ட திருத்தம் மேற்கொள்ளலாம்
🌸1976-ஆம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தத்தின் மூலம் முகவுரை ஒரே ஒரு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
🌸இதன்படி சமதர்மம், மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகிய 3 வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
🌸தற்போது - முகவுரையில் அமைந்துள்ள வார்த்தைகளின் வரிசை அமைப்பு - இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு
🌸முகவுரையில் இடம்பெற்றுள்ள SOVEREIGN - இறையாண்மை என்ற சொல் SUPERANUS என்ற லத்தின் வார்த்தையிலிருந்து தோன்றியது.
🌸 SOVEREIGN- இறையாண்மை என்னும் சொல் ஜீன்போடின் என்ற அறிஞர் 1576-ல் எழுதி வெளியிட்ட குடியரசு என்ற நூலில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.
🌸SECULARISM என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற லத்தின் சொல்லிலிருந்து தோன்றியது.
🌸 DEMOCRACY என்ற சொல் DEMOS & CRATIA என்ற இரு கிரேக்க சொல்லிலிருந்து தோன்றியது.
🌸LIBERTY என்ற சொல் லிபர் எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகியது.
🌸EQUALITY என்ற சொல் AEQUALIS என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது.
(சமத்துவம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் - ராபர்ட் ஓவன் இவர் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை)
🌸முகவுரை பற்றிய அறிஞர்களின் வாழ்த்துரைகள் :
1. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் - நமது நீண்ட நாள் கனவை முகவுரை பிரதிபலிக்கிறது.
2. எர்னஸ்ட் பார்க்கர் - அரசியலமைப்பின் திறவுகோல் & முக்கிய குறிப்பே முகவுரை
3. K.M.முன்ஷி - மக்களாட்சி குடியரசு ஜாதகமே முகவுரை
4. பல்கிவாலா- அரசியலமைப்பின் அடையாள அட்டையே முகவுரை
5. ஐவர் ஜென்னிங்ஸ் - வழக்கறிஞரின் சொர்க்கமே முகவுரை
6. நீதிபதி.இதயத்துல்லா - முகவுரை ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பு போன்று இருப்பினும் அதைவிட சிறப்பானதாக இந்திய முகவுரை உள்ளது.
🌸 முகவுரை தொடர்புடைய முக்கிய வழக்குகள் :
1. பெருபாரி வழக்கு 1960
முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என கூறப்பட்டது
2. கேசவானந்த பாரதி வழக்கு 1973
முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி தான்... ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் திருத்தலாம்... என தீர்ப்பு வழங்கப்பட்டது.
3. LIC வழக்கு - 1995
முகவுரையானது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி தான் என மீண்டும் உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Tuesday, November 26, 2024
GK : முகப்புரை / PREAMBLE
Tags:
GENERAL KNOWLEDGE
GENERAL KNOWLEDGE
Tags:
GENERAL KNOWLEDGE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment