செய்யுளில், சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
சான்று
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
சான்றின் விளக்கம்
ஒரு பொருட்டாக மதிக்காதவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்வது பொருட்செல்வமே ஆகும்.
பொருத்தம்
இக்குறளில் பொருள் என்னும் சொல் பொருள் என்னும் பொருளில் மீண்டும் மீண்டும் வருவதால் இஃது சொற்பொருள் பின்வருநிலையணிக்குச் சான்று ஆகும்.
No comments:
Post a Comment