Sunday, May 12, 2024

10TH TAMIL கேட்கிறதா என் குரல்

1. ’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல் அடிகளுக்குஉரியவர்----------.

அ) இளங்கோவடிகள்
ஆ)கம்பர்
இ) ஓளவையார்
ஈ) திருமூலர்

2. திருமூலர் இயற்றிய நூல் -------------.

அ) திருமந்திரம்
ஆ)திருவாசகம்
இ) திருப்பாவை
ஈ) சிலப்பதிக்காரம்

3. மூச்சிப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்

அ) இளங்கோவடிகள்
ஆ)கம்பர்
இ) ஓளவையார்
ஈ) திருமூலர்

4.கிழக்கிலிருந்து வீசும் காற்று.

அ) கொண்டல்
ஆ)வாடை
இ) தென்றல்
ஈ) கோடை

5.மேற்கிலிருந்து வீசும் காற்று.

அ) கொண்டல்
ஆ)வாடை
இ) தென்றல்
ஈ) கோடை

6. வடக்கிலிருந்து வீசும் காற்று.

அ) கொண்டல்
ஆ) வாடை
இ) தென்றல்
ஈ) கோடை

7. தெற்கிலிருந்து வீசும் காற்று.

அ) கொண்டல்
ஆ)வாடை
இ) தென்றல்
ஈ) கோடை

8. ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல்.

அ) புறநானூறு
ஆ)தென்றல்விடுதூது
இ) சிலப்பதிகாரம்
ஈ) நற்றிணை

9. ’நந்தமிழும் தண் பொருநை நன்னதியும் சேர்பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ – இப்பாடல்அடிஇடம்பெற்றுள்ளநூல்.

அ) புறநானூறு
ஆ)தென்றல் விடுதூது
இ) சிலப்பதிகாரம்
ஈ) நற்றிணை

10. ’வளி மிகின் வலி இல்லை’ என்றுகூறியவர்.

அ) இளங்கோவடிகள்
ஆ)கம்பர்
இ) ஓளவையார்
ஈ) ஐயூர் முடவனார்

11. ’வளி மிகின் வலி இல்லை’ இப்பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல்.

அ) புறநானூறு
ஆ)தென்றல்விடுதூது
இ) சிலப்பதிகாரம்
ஈ) நற்றிணை

12. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம்

அ) வடகிழக்குபருவக்காலம்
ஆ)தென்கிழக்குபருவக்காலம்
இ) வடமேற்குபருவக்காலம்
ஈ) தென்மேற்கு பருவக்காலம்

13. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலானகாலம்.

அ) வடகிழக்கு பருவக்காலம்
ஆ)தென்கிழக்குபருவக்காலம்
இ) வடமேற்குபருவக்காலம்
ஈ) தென்மேற்குபருவக்காலம்

14. ஒரு மனிதன் ஒருமணித்துளிக்கு வெளியிடும் கார்பன்டை ஆக்சைடின் அளவு.

அ) 10 முதல் 18 வரை
ஆ) 11 முதல் 16 வரை
இ) 12 முதல் 18 வரை
ஈ) 11 முதல் 18 வரை

15. உலக காற்று நாள்.

அ) ஜூன் 15
ஆ)ஜூன் 12
இ) ஜுலை 15
ஈ) ஜுலை 12

16. செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது எனக்குப் பெருமையே.

செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

அ) செய்தி 1 மட்டும்சரி
ஆ)செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும்சரி
ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

17. தொல்காப்பியம் உலகம் எதனால் ஆனது என்கிறார்.

அ) ஐம்பொறிகளால்
ஆ) ஐம்பூதங்களால்
இ) உலோகங்களால்
ஈ) வேதிப்பொருளால்

18. ஹிப்பாலஸ் என்பவர் ஒரு --------- மாலுமி.

அ) ரஷ்ய
ஆ) சீன
இ) அமெரிக்க
ஈ) கிரேக்க

19. தற்போது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக குளிர்ப்பதனத்தில் ----------- பயன்படுத்தப்படுவது.

அ) ஹைட்ரோ கார்பன்
ஆ) குளோரோ புளோரோ கார்பன்
இ) கந்தக டை ஆக்சைடு
ஈ) நைட்ரஜன் டை ஆட்சைடு

20. ஓசோன் படலத்தின் சிதைவால் ஏற்படும் விளைவு.

அ) புற ஊதா கதிர்களின் நுழைவு
ஆ) பூமியில் ஏலியஸ்களின் நுழைவு
இ) விமான விபத்து
ஈ) அமில மழை பொழிதல்

21. கந்தக டை ஆக்சைடும் நைட்ரஜன் டை ஆட்சைடும் நீரில் கலப்பதால் ஏற்படும் விளைவு ---.

அ) புற ஊதா கதிர்களின் நுழைவு
ஆ) பூமியில் ஏலியஸ்களின் நுழைவு
இ) விமான விபத்து
ஈ) அமில மழை பொழிதல்

No comments:

Post a Comment