1.
வேர்ச் சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.
(A)
வா – வந்து
(B)
காண் – கண்ட
(C)
கொள் – கொண்டு
(D)
நில் -நின்று
2.
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க. - வாழியர்
(A)
வாழ்
(B)
வாழி
(C)
வா
(D)
வாழிய
3.
ஒரு பொருள் தரும் பல சொற்கள் - “நெருப்பு”
(A)
அனல், கனல்
(B)
தணல், வெயில்
(C)
தண்ணீர், தீ
(D)
வெயில், குளிர்
4)
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக. - அலை – அளை
(A)
கூப்பிடு – தயிர்
(B)
நத்தை – சேறு
(C)
துன்பம் – சோறு
(D)
கடல் – பாம்புப்புற்று
5.
விலை, விளை, விழை போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க
(A)
உண்டாக்குதல், விரும்பு, பொருளின் மதிப்பு
(B)
விரும்பு, பொருளின் மதிப்பு. உண்டாக்குதல்
(C)
விரும்பு, உண்டாக்குதல், பொருளின் மதிப்பு
(D)
பொருளின் மதிப்பு,
உண்டாக்குதல், விரும்பு
6.
கீழ்க்கண்டவற்றுள் திசைச்சொற்களைக் கண்டறிக :
(A)
மண், பொன்
(B)
சாவி, சன்னல்
(C)
அழுவம், வங்கம்
(D)
விடம், மடம்
7.
‘சமுதாயம்’ என்ற வடசொல்லின் நேரான தமிழ்ச்சொல்
(A)
மன்பதை
(B)
குழாம்
(C)
நெறி
(D)
உண்மை
8.
பிழை திருத்தம் - சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1.
பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
2.
பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.
3.
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
4.
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
(A)
1 மற்றும் 3
(B)
3 மற்றும் 4
(C)
2 மற்றும் 3
(D)
1 மற்றும் 4
9.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. - ‘தாமரை இலை நீர்போல ‘
(A)
ஏமாற்றம்
(B)
பற்றுதல் இன்றி
(C)
ஏற்றம்
(D)
இரக்கம்
10.
பொருந்தா இணையைக் கண்டறிக.
(A)
தாய்தந்தை – உம்மைத்தொகை
(B)
பொற்றொடி வந்தாள்
– உவமைத்தொகை
(C)
பனைமரம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(D)
வளர்தமிழ் – வினைத்தொகை
11.
சொல்லுக்குரிய பொருளை அறிக. - பொம்மல்
(A)
பொம்மை
(B)
சோறு
(C)
பொம்மலாட்டம்
(D)
பொதும்பல்
12.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல். - குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
(A)
குறிஞ்சி, மருதம் நிலங்கள்
(B)
மருதம், நெய்தல் நிலங்கள்
(C)
குறிஞ்சி, நெய்தல் நிலங்கள்
(D)
முல்லை, பாலை நிலங்கள்
13.
வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து பொருள் கூறு.- விலை – விளை
(A)
உண்டாக்குதல் – பொருளின் மதிப்பு
(B)
பொருளின் மதிப்பு – விரும்பு
(C)
உண்டாக்குதல் – விரும்பு
(D)
பொருளின் மதிப்பு
– உண்டாக்குதல்
14.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல். - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
(A)
செய்வினை வாக்கியம்
(B)
செயப்பாட்டு வினை வாக்கியம்
(C)
தன்வினை வாக்கியம்
(D)
பிறவினை வாக்கியம்
15.
கீழ்க்கண்டவற்றுள் செயப்பாட்டு வினைத்தொடர் எது எனக் கண்டறிக.
(A)
ஓட்டுநரா பேருந்தை இயக்கினார்?
(B)
ஓட்டுநர் பேருந்தை இயக்கினார்.
(C)
ஓட்டுநரால் பேருந்து
இயக்கப்பட்டது.
(D)
ஓட்டுநர் பேருந்தை இயக்கவில்லை
16.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
(A)
பூங்குழலி திருக்குறள் கற்றள்
(B)
பூங்குழலி திருக்குறள் கற்கவில்லை
(C)
பூங்குழலி திருக்குறள் கற்றாளா?
(D)
பூங்குழலி திருக்குறள்
கற்பித்தாள்
17.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். - தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
(A)
தூது இலக்கியம் எவ்வகையைச்
சார்ந்தது?
(B)
சங்க இலக்கியத்தை சார்ந்ததா?
(C)
தூது இலக்கியம் எக்காலத்தைக் குறிக்கிறது?
(D)
சங்க மருவிய கால நூல்கள் என்னென்ன?
18.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் - எங்கள் வீட்டில் தக்காளி இல்லை
(A)
உங்கள் வீட்டில் இருக்கிற தக்காளி எவ்வளவு?
(B)
உங்கள் வீட்டில் தக்காளி
இருக்கிறதா?
(C)
தக்காளி வீட்டில் இருக்கிறதா?
(D)
தக்காளி உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?
19.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். - திருக்குறள் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
(A)
திருக்குறள் எத்தனை
குறள்பாக்களைக் கொண்டுள்ளது?
(B)
திருக்குறள் அதிகாரங்கள் எத்தனை?
(C)
திருக்குறள் எதற்கான குறள்களைக் கொண்டுள்ளது?
(D)
திருக்குறளை இயற்றியவர் யார்?
20.
அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A)
கிளி, தையல், மனிதன், தேனீ
(B)
கிளி, மனிதன், தையல், தேனீ
(C)
கிளி, தேனீ, தையல்,
மனிதன்
(D)
தையல், தேனீ, கிளி, மனிதன்
21.
பொருத்துக:
(a)
உழைப்புக்கு கொடுப்பது – 1. குரல்
(b)
உரிமைக்கு கொடுப்பது – 2. உணவு
(c)
கவலைக்கு கொடுப்பது – 3. கூலி
(d)
பசித்தவனுக்கு கொடுப்பது – 4. விடை
(A) 2 3 1 4
(B) 3 4 2 1
(C) 1 4 3 2
(D) 3 1 4 2
22.
சொற்களை ஒழுங்குபடுத்துக - ‘முறையாகப் பண்டமாற்று வணிகம் தொடங்கியது’
(A)
வணிகம் பண்டமாற்று
முறையாகத் தொடங்கியது
(B)
பண்டமாற்று வணிகம் தொடங்கியது முறையாக
(C)
முறையாகத் தொடங்கியது பண்டமாற்று வணிகம்
(D)
வணிகம் தொடங்கியது பண்டமாற்று முறையாக
23.
சொற்களை ஒழுங்குபடுத்துக - “செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம் இப்போது நாம்“
(A)
இப்போது இருக்கிறோம் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் நாம்
(B)
இருக்கிறோம் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் நாம் இப்போது
(C)
இருக்கிறோம் நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில்
(D)
நாம் இப்போது செயற்கை
நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம்
24.
பொருத்தமான காலம் அமைத்தல் - சரியானத் தொடரைத் தேர்ந்தெடு
(A)
மாலனை கந்தன் வீழ்த்தினான்
(இறந்த காலம்)
(B)
மாலனை கந்தன் வீழ்த்துவான் (நிகழ்காலம்)
(C)
மாலனை கந்தன் வீழ்த்துகிறான் (எதிர்காலம்)
(D)
மாலனை கந்தன் வீழ்த்திச் சென்றான் (நிகழ்காலம்)
25.
சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு. - ஆடு –
சரியான சொல்
(A)
கன்று
(B)
குட்டி
(C)
குழவி
(D)
குருளை
26.
சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க - விளையாட்டு, பறவை, பாட்டு, திடல்
(A)
பறவை பாட்டு
(B)
பாட்டு விளையாட்டு
(C)
விளையாட்டுத் திடல்
(D)
பறவை விளையாட்டு
27.
சரியான எழுத்து வழக்கினைக் கண்டறிக - தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சது
(A)
தேங்கா உழுந்து மண்டை உடைந்தது
(B)
தேங்காய் விழுந்து மண்ட உடைந்தது.
(C)
தேங்காய் விழுந்து
மண்டை உடைந்தது
(D)
தேங்காய் விழுந்து மண்டை உடைஞ்சது
28.
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்ந்தெடு.
(A)
அவருக்கு நல்லது கெட்டது
நல்லாத் தெரியும்
(B)
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
(C)
வறட்சி அனைத்து இடங்களையும் பாதித்துள்ளது
(D)
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
29.
பின்வரும் தொடர்களில் எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.
(A)
முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமல் போவாது
(B)
தேர்வெழுத வேகமாகப் போங்க நேரமானால் பதட்டமாயிரும்
(C)
காலையில் எழுந்து
படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்
(D)
காலத்துக்கேத்த மாதிரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்
30.
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போது
(A)
அரைப்புள்ளி
(B)
முக்காற்புள்ளி
(C)
ஒற்றை மேற்கோள் குறி
(D)
இரட்டை மேற்கோள் குறி
31.
குடந்தை என வழங்கப்படும் ஊர்ப் பெயரைக் கண்டறிக
(A)
குடுமியான் மலை
(B)
கும்பகோணம்
(C)
குற்றாலம்
(D)
குடவாசல்
32.
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
(A)
திருச்சிராப்பள்ளி – திருச்சி
(B)
புதுக்கோட்டை – புதுவை
(C)
மயிலாப்பூர் – மயிலம்
(D)
நாகர்கோவில் – நாகை
33.
இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக - ‘எக்ஸ்பெரிமென்ட்’
(A)
செய்முறை
(B)
சோதனை
(C)
பரிசோதனை
(D)
உற்றுநோக்கல்
34.
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - செக்
(A)
காசோலை
(B)
வரைவோலை
(C)
பணத்தாள்
(D)
பற்று அட்டை
35.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக.
(a)
Cabinet – 1. எல்லை
(b)
Cultural – 2. மனிதநேயம்
(c)
Humanism – 3. பண்பாடு
(d)
Boundaries – 4. அமைச்சரவை
(A) 4 3 2 1
(B) 2 4 1 3
(C) 3 2 4 1
(D) 1 2 3 4
36.
உடன்பட்டுக் கூறும் விடை என்பதை கீழ்வருவனவற்றுள் எந்த விடையைக் கூறலாம்?
(A)
உற்றது உரைத்தல் விடை
(B)
நேர்விடை
(C)
இனமொழி விடை
(D)
உறுவது கூறல் விடை
37.
விடை எத்தனை வகைப்படும்? விடை வகைகள்
(A)
இரண்டு
(B)
ஆறு
(C)
எட்டு
(D)
ஐந்து
38.
அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக - ஸ்டேப்ளர் (Stapler)
(A)
மை பொதி
(B)
மடிப்புத் தாள்
(C)
கம்பி தைப்புக் கருவி
(D)
கோப்பு
39.
அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக - ரப்பர் ஸ்டேம்ப் (Rubber
Stamp)
(A)
கோப்பு
(B)
இழுவை முத்திரை
(C)
மடிப்புத் தாள்
(D)
கம்பி தைப்புக் கருவி
40.
அலுவல் சார்ந்த (கலைச்சொல்) சொற்கள் - சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
(A)
உருபன் – உரேபன்
(B)
ஒலியன் – ஒலியன்
(C)
பேரகராதி – பேராகராதி
(D)
ஒப்பிலக்கணம் – ஒப்பில் இலக்கணம்
கீழ்க்கண்ட
பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
நெல்லை
மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று
ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச்
சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. மேலவீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது.
கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத் தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத்
தெரு என வழங்கப்படுகிறது. அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும்
இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத்
தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.
நெல்லை
நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளன. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல்
பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய
மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம்
எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர் கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை
நகர் என்றும் வழங்கப்படுகின்றன.
41.
காவற்புரை என்றால் என்ன?
(A)
சிறைச்சாலை
(B)
காவற்சாலை
(C)
காவலர்
(D)
அரசர்
42.
கூலம் என்பது எதைக் குறிக்கும் ?
(A)
பயிறு
(B)
அரிசி
(C)
தானியம்
(D)
பயறு
43.
அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எது?
(A)
அணிகலன்
(B)
பொன்
(C)
தட்டச்சன்
(D)
அக்கசாலை
44.
பாண்டிய மன்னரை வரவேற்ற இடம் எது?
(A)
அயனபுரம்
(B)
அரண்மனை
(C)
பாண்டியபுரம்
(D)
பாண்டியர்
45.
நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது ?
(A)
நெல்லையப்பர்
(B)
பேட்டை
(C)
காவலர்
(D)
நின்றசீர்
46.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
(A)
நான் வாங்கிய நூல் இது அல்ல
(B)
நான் வாங்கிய நூல்
இது அன்று
(C)
நான் வாங்கிய நூல்கள் இது அல்ல
(D)
நான் வாங்கிய நூல்கள் இவை அன்று
47.
ஒருமை – பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.
(A)
பகைவர் நீவீர் அல்லர்
(B)
பகைவர் நீவீர் அல்லீர்
(C)
பகைவர் நீவீர் அல்லோம்
(D)
பகைவர் நீவீர் அல்ல
48.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(A)
மதலை, நெகிழி, அழுவம், சென்னி, உரவு நீர், கரையும்
(B)
அழுவம், உரவு நீர், மதலை, நெகிழி, சென்னி, கரையும்
(C)
நெகிழி, அழுவம், உரவு நீர், கரையும், மதலை, சென்னி
(D)
அழுவம், உரவு நீர்,
கரையும், நெகிழி. சென்னி, மதலை
49.
‘கெடுதல்’ என்ற தொழிற்பெயர் எவ்வாறு திரியும் ?
(A)
கெடு, கேடு
(B)
கொடு, கோடு
(C)
கேடு, கோடு
(D)
கெடு, கொடு
50.
விகுதி பெறாத தொழிற்பெயர்
(A)
கூத்து
(B)
வேக்காடு
(C)
கடவுள்
(D)
ஏற்றுமதி
51.
பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி
I பகுதி II
(a)
குறிஞ்சி - 1. வருணன்
(b)
முல்லை - 2. முருகன்
(c)
மருதம் - 3. திருமால்
(d)
நெய்தல் - 4. இந்திரன்
(A) 3 1 4 2
(B) 2 3 4 1
(C) 1 2 3 4
(D) 4 1 2 3
52.
எடுத்துக்காட்டினை பொருத்துக - மரம், காடு –
மா, கருவேலங்காடு
(A)
இடுகுறிப்பெயர் – காரணப்பெயர்
(B)
இடுகுறிப்பெயர் –
இடுகுறி சிறப்புப்பெயர்
(C)
பண்புப்பெயர் – இடுகுறிப்பெயர்
(D)
இடுகுறிப்பெயர் – சினைப்பெயர்
53.
சொல் – பொருள் பொருத்துக.
(A)
காலை – பணி
(B)
தால் –
நாக்கு
(C)
தழை – கட்டு
(D)
வேலை – வேளை
54.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A)
வலதுபக்கச் சுவரில் எழுதாதே
(B)
இடப் பக்கச் சுவரில்
எழுதாதே
(C)
வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
(D)
இடது பக்கச் சுவற்றில் எழுதாதே
55.
சந்திப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.
(A)
கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
(B)
கயிற்றுக் கட்டிலில்
தன்னை மறந்து உறங்கினான்.
(C)
கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
(D)
கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
56.
சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக.
(A)
தில்லான், “இந்திய
தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.
(B)
“தில்லான்” இந்திய தேசிய இராணுவத்தின், இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
(C)
தில்லான், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
(D)
தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின், இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்’.
57.
சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
(A)
மனிதா, மனிதா ! அழைப்பது கேட்கிறதா? எங்கு பார்க்கிறாய் ; யாரைத் தேடுகிறாய்?
(B)
மனிதா மனிதா அழைப்பது கேட்கிறதா; எங்கு பார்க்கிறாய் ; யாரைத் தேடுகிறாய்?
(C)
மனிதா ! மனிதா ! அழைப்பது
கேட்கிறதா? எங்கு பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்?
(D)
மனிதா, மனிதா, அழைப்பது கேட்கிறதா? எங்கு பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்?
58.
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.
(A)
கோவை – கோயம்புத்தூர்
(B)
திருச்சி – திருச்சிராப்பள்ளி
(C)
நெல்லை –
நெய்வேலி
(D)
புதுவை – புதுச்சேரி
59.
‘சனி நீராடு’ எப்புலவரின் வாக்கு ?
(A)
பாரதியின் வாக்கு
(B)
பாரதிதாசனின் வாக்கு
(C)
ஒளவையின் வாக்கு
(D)
கம்பரின் வாக்கு
60.
சரியான எண்ணடையைக் கண்டறிக.
(A)
ஒரு இரவு
(B)
ஒன்று இரவு
(C)
ஒன் இரவு
(D)
ஓர் இரவு
61.
‘நன்மொழி’ – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
(A)
நல்ல மொழி
(B)
தீமொழி
(C)
நற்சொல்
(D)
நன்மை
62.
குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக - அழி – ஆழி
(A)
அழித்தல் – வீரம்
(B)
வயல் – கடல்
(C)
நெருப்பு – பறவை
(D)
அழித்தல் – கடல்
63.
மதி –
இரு பொருள் கண்டறிக.
(A)
நிம்மதி, மதித்தல்
(B)
நிலா, அறிவு
(C)
சந்திரன், அழகு
(D)
இடை, கடை
64.
இரு பொருள் தருக - கால்
(A)
கால் பங்கு பிரித்துக்கொடு,
ஈரம் பார்த்து கால் வை
(B)
கால் வலிக்கிறது. காலில் செருப்பு அணி
(C)
கால் முறிந்தது. காலில் புண் உள்ளது
(D)
கடல் அலை, கால் பாகம் உண்டு.
65.
இச்செயலைச் செய்தது மங்கையா? மடந்தையா? என்று வினவுவது
(A)
கொடை வினா
(B)
ஏவல் வினா
(C)
ஐய வினா
(D)
அறியா வினா
66.
பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும்! வருந்தி உழைத்தாலும்
உழவுத் தொழிலே சிறந்தது – சரியான இணைப்புச்சொல்லை எழுது.
(A)
எனவே
(B)
அதனால்
(C)
ஆகையால்
(D)
அதுபோல
67.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக. (நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்
____________ துன்பப்பட நேரிடும்.)
(A)
ஏனெனில்
(B)
இல்லையென்றால்
(C)
அதனால்
(D)
ஆகையால்
68.
பிரித்தெழுதுதல் - ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A)
இரண்டு + டல்ல
(B)
இரண் + அல்ல
(C)
இரண்டு + இல்ல
(D)
இரண்டு + அல்ல
69.
பிரித்து எழுதுக - ‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A)
பெரு + கடல்
(B)
பெருமை + கடல்
(C)
பெரிய + கடல்
(D)
பெருங் + கடல்
70.
இரு பொருள் கொண்ட ஒரு சொல். ( அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை .......... பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி ...................... )
(A)
வழக்கு
(B)
அழகு
(C)
நடை
(D)
நயம்
71.
அடைப்புக்குறிக்குள் உள்ள சொல்லை பொருத்தமான இடத்தில் எழுது (அவர்)
(A)
என் வீடு _______________ உள்ளது.
(B)
தம்பி ___________ வா.
(C)
நீர் __________________ தேங்கி இருக்கிறது.
(D)
யார்
____________ தெரியுமா?
72.
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (வேற்றுமை)
(A)
_______________ இறக்கமும் மலைக்கு அழகு
(B)
அழுகையும் _______________ வாழ்வில் இயல்பு
(C)
________________ முதுமையும் யாவர்க்கும் உண்டு
(D)
ஒற்றுமை கண்டால்
_______________________ நீங்கும்
73.
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (உணவு)
(A)
உறவுக்கு _______________________ கொடு
(B)
பசித்தவனுக்கு
_______________ கொடு
(C)
உழைப்புக்கு _____________________ கொடு
(D)
உரிமைக்கு _____________________ கொடு
74.
குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது காக்கையின் கூட்டில் முட்டையிடும். - சரியான இணைப்புச்
சொல் எது ?
(A)
அதனால்
(B)
ஆகையால்
(C)
எனவே
(D)
ஏனெனில்
75.
கல் – கூட்டுப் பெயர் - சரியான எண்ணடையைத்
தேர்வு செய்க.
(A)
கல்லுக்கூட்டம்
(B)
கற்குலை
(C)
கற்கட்டு
(D)
கற்குவியல்
76.
தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு. - ஆராயும் அறிவு உடையவர்கள் ......... சொற்களைப் பேசமாட்டார்.
(A)
உயர்வான
(B)
விலையற்ற
(C)
பயன்தராத
(D)
பயன் உடைய
77.
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் - சரியான இணையைத் தேர்ந்தெடு
(A)
தாள் – முடி
(B)
பனி – குளிர்
(C)
அரம் –
வீரம்
(D)
கரம் –
கால்
78.
தவறான இணையைத் தேர்க.
(A)
தொண்டு – Charity
(B)
தத்துவம் – Philosophy
(C)
பகுத்தறிவு – Integrity
(D)
சீர்திருத்தம் – Reform
79.
கலைச் சொற்களை அறிதல் - சரியான இணையைத் தேர்க.
(A)
ஆன்லைன் ஷாப்பிங் – மின்னணு வணிகம்
(B)
கிரெடிட் கார்டு – காசோலை
(C)
ஈ காமர்ஸ் –
மின்னணு மயம்
(D)
டிமாண்ட் டிராப்ட் –
வரைவோலை
80.
‘Epigraph’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
தேர்ந்தெடுக்க.
(A)
சித்திர எழுத்து
(B) கல்வெட்டு
(C)
செப்பேடு
(D)
ஒப்பெழுத்து
81.
கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
காரணம் : பண்டைத்தமிழ் மன்னர்களின் ஆட்சி, வீரம், கொடை, கல்வி
முதலியவற்றை அறியலாம்.
(A)
கூற்று சரி : காரணம்
சரி
(B)
கூற்று தவறு : காரணம் தவறு
(C)
கூற்று சரி : காரணம் தவறு
(D)
கூற்று தவறு : காரணம் சரி
82.
கூற்று –
காரணம் – சரியா? தவறா?
கூற்று : திருமூலர்
திருமந்திரம் எழுதினார்
காரணம் : பதினெண் சித்தர்களுள்
ஒருவர் திருமூலர்
(A)
கூற்று தவறு: காரணம் தவறு
(B)
கூற்று சரி : காரணம் தவறு
(C)
கூற்று தவறு: காரணம் சரி
(D)
கூற்று சரி : காரணம்
சரி
83.
குறில் நெடில் மாற்றம் - தவறான இணையைக் கண்டறிக
(A)
கலம் காலம்
(B)
சுழல் சூழல்
(C)
புகழ் திகழ்
(D)
வளம் வாழ்வு
84.
உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் - கல்லில் நார் உரித்தல்
(A)
நீண்டகாலமாக இருப்பது
(B)
ஆராய்ந்து பாராமல்
(C)
இயலாத செயல்
(D)
விரைந்து வெளியேறுதல்
85.
சொற்களை ஒழுங்குபடுத்துக. - “வரின் ஆயினும் அல்லில் விருந்து உவக்கும்”
(A)
ஆயினும் உவக்கும் விருந்துவரின் அல்லில்
(B)
விருந்துவரின் உவக்கும் அல்லில் ஆயினும்
(C)
அல்லில் ஆயினும் விருந்துவரின்
உவக்கும்
(D)
உவக்கும் விருந்துவரின் ஆயினும் அல்லில்
86.
ஆங்கிலச் சொல்லுக்கான நேரான தமிழ்ச்சொல் அறிக.
(a)
Vowel 1. ஒரு மொழி
(b)
Consonant 2. ஒப்பெழுத்து
(c)
Homograph 3. உயிரெழுத்து
(d)
Monolingual 4. மெய்யெழுத்து
(A) 2 3 1 4
(B) 4 2 3 1
(C) 3 1 2 4
(D) 3 4 2 1
87.
Space Technology என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக.
(A)
விண்வெளி நுட்பம்
(B)
உயிரித் தொழில்நுட்பம்
(C)
விண்வெளித் தொழில்
நுட்பம்
(D)
மீநுண் தொழில் நுட்பம்
88.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக
(a)
Crop 1.
உறை
(b)
Folder 2. உலாவி
(c)
Cursor 3. செதுக்கி
(d)
Browser 4. சுட்டி
(A) 3 4 2
1
(B) 2 3 1 4
(C) 3 1 4 2
(D) 4 2 3 1
89.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக
(A)
பனை வடலி
(B)
தென்னங்கன்று
(C)
வாழை நாற்று
(D)
விளாங்கூழ்
90.
வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக - சென்றனர்
(A)
சென்று
(B)
செல்
(C)
சென்ற
(D)
செல்ல
91.
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் - நடந்தாள்
(A)
நட
(B)
நடக்கிறாள்
(C)
நடப்பாள்
(D)
நடக்குவாள்
92.
ஒருபொருள் தரும் பல சொற்கள் - “வயல்”
(A)
பகல், பழனம்
(B)
கழனி, பழனம்
(C)
செய், நெல்
(D)
நீர்நிலை, கேணி
93.
சேர்த்து எழுதுக - எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A)
எழுத்து ஆணி
(B)
எழுத்தாணி
(C)
எழுத்து தாணி
(D)
எழுதாணி
94.
சரியான வினாவைத் தேர்ந்தெடு - “இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர்
கேட்டது
(A)
ஐயவினா
(B)
அறியா வினா
(C)
அறிவினா
(D)
கொளல் வினா
95.
சரியான வினாச்சொல் எது? - நெல்லையப்பர் கோவில் _____ உள்ளது?
(A)
எப்படி
(B)
எத்தனை
(C)
எங்கு
(D)
என்ன
96.
மூன்று காலங்களையும் குறிக்கும் சொல் எது ?
(A)
நடந்தாள், நடக்கிறாள்,
நடப்பாள்
(B)
காண், காண்பாள். கண்டாள்
(C)
ஆடினாள், ஆடு, ஆடுவாள்
(D)
பார்த்தல், பார்ப்பாள், பார்த்தாள்
97.
தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க
(A)
பசுமரத்தாணிபோல – எளிதில் மனத்தில் பதிதல்
(B)
மடைதிறந்த வெள்ளம்போல – தடையின்று
(C)
கீரியும் பாம்பும்
போல –
ஒற்றுமை
(D)
விழலுக்கு இறைத்த நீர்போல – பயனற்றசெயல்
98.
எதிர்சொல்லை எடுத்தெழுது - எத்தனிக்கும்
(A) முயலாமை
(B)
அறியாமை
(C)
நீங்காமை
(D)
தளராமை
99.
“இளமை” –
என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
(A)
புதுமை
(B)
முதுமை
(C)
தனிமை
(D)
இனிமை
100.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க. கூட்டப் பெயர்
- ‘புள்’
(A)
புள் கூட்டம்
(B)
புள் திரள்
(C)
புட் குழாம்
(D)
புள் குவியல்
No comments:
Post a Comment