Saturday, February 24, 2024

6TH TAMIL - சிறகின் ஓசை

1. வலசை போதல் என்பது

அ) பறவைகள் இடம்பெயர்தல்
ஆ) விலங்குகள் இடம்பெயர்தல்
இ) பாம்புகள் இடம்பெயர்தல்
ஈ) ஆமைகள் இடம்பெயர்தல்

2. பறவைகள் இடம்பெயர்தலுக்கு அடிப்படை அல்லாத ஒன்று.

அ) உணவு
ஆ) நிலவு
இ) விண்மீன்
ஈ) புவி ஈர்ப்புப் புலம்

3. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றம் அல்லாத ஒன்று.

அ) தலையில் சிறகு வளர்தல்
ஆ) இறகுகளின் நிறம் மாறுதல்
இ) கால்களில் மாற்றம் ஏற்படுதல்
ஈ) உடலில் கற்றையாக முடிவளர்தல்

4. ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று பாடியவர்.

அ) காக்கை பாடினியார்
ஆ) சத்திமுத்தப் புலவர்
இ) நக்கீரர்
ஈ) நப்பசலையார்

5. பறவைகள் வலசைபோதலைப் பாடிய புலவர்.

அ) காக்கை பாடினியார்
ஆ) சத்திமுத்தப் புலவர்
இ) கபிலர்
ஈ) ஓரம்போகி

6.கீழ்க்கண்டவற்றுள் வலசைபோகும் பறவைகள் என்பன.

அ) நிலவாழ் பறவைகள்
ஆ) மலைவாழ் பறவைகள்
இ) நீர்வாழ் பறவைகள்
ஈ) மரம்வாழ் பறவைகள்

7. ‘தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகு வீராயின்’ என்னும் பாடலடிகள் எதனைக் குறிப்பிடுகின்றன.

அ) பறவைகள் இனப்பெருக்கம் செய்தல்
அ) பறவைகள் வலசைபோதல்
இ) பறவைகள் உணவுக்காகச் செல்லல்
ஈ) பறவைகள் இருப்பிடம் தேடிச் செல்லல்

8. எந்த நாட்டில் இருந்து செங்கால் நாரைகள் வருவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

அ) ஆஸ்திரேலியா
ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா

9.  வெளிநாட்டுப் பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழும் இடம்.

அ) குஜராத்
ஆ) தமிழ்நாடு
இ) கேரளா
ஈ) ஆந்திரா

10. வெகுவாக அழிந்துவரும் பறவை இனங்களுள் ஒன்று.

அ) மைனா
ஆ) சிட்டு
இ) கிளி
ஈ) மயில்

11. ‘தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும் பறவை/

அ) பெண் சிட்டு
ஆ) ஆண் சிட்டு
இ) செம்போத்து
ஈ) கருவாட்டுவால் குருவி

12. மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும் பறவை.

அ) பெண் சிட்டு
ஆ) ஆண் சிட்டு
இ) செம்போத்து
ஈ) கருவாட்டுவால் குருவி

13. சிட்டுக் குருவி தொடர்பாகப் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

அ) கூடுகட்டி வாழும் பறவை இனத்தைச் சார்ந்தது.
ஆ) வெகுவாக அழிந்து வரும் பறவை இனம்
இ) சிறகடிக்காமல் பறக்கும் பறவை
ஈ) பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்

14. கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1 ஐரோப்பாவில் இருந்து செங்கால் நாரைகள் வருகின்றன
கூற்று 2 வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

அ) கூற்றுகள் இரண்டும் சரி
ஆ) கூற்றுகள் இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி, 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

15. கப்பல் பறவையோடு பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) சிறகடிக்காமல் கடலையும் தாண்டும் பறவை
ஆ) தரையிறங்காமல் 400 கி.மீ வரை பறக்கும்.
இ) உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம்.
ஈ) இது கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது

16. சிட்டுக் குருவியின் அடைகாக்கும் காலம்.

அ) பத்து நாட்கள்
ஆ) பதினான்கு நாட்கள்
இ) இருபது நாட்கள்
ஈ) ஒன்பது நாட்கள்

17. சத்தமிட்டுக் கொண்டே கூடுகட்டும் பறவை இனம்.

அ) மைனா
ஆ) சிட்டு
இ) காகம்
ஈ) மயில்

18. சிட்டுக் குருவிகள் தன் குஞ்சுகளுக்கு எவற்றை உணவாக ஊட்டும்.

அ) தானியங்கள்
ஆ) மலர் அரும்புகள்
இ) இளந்தளிர்கள்
ஈ) புழு பூச்சிகள்

19. சிட்டுக் குருவியின் வாழ்நாள்.

அ) 9 - 15 ஆண்டுகள்
ஆ) 10 - 13 ஆண்டுகள்
இ) 11 - 13  ஆண்டுகள்
ஈ) 5 - 7  ஆண்டுகள்

20. கப்பல் பறவை தரையிறங்காமல் எத்தனை கிலோ மீட்டர் வரை பறக்கும்.

அ) 100 கிலோ மீட்டர்
ஆ) 200 கிலோ மீட்டர்
இ) 400 கிலோ மீட்டர்
ஈ) 700 கிலோ மீட்டர்

21. கப்பல் பறவையின் வேறு பெயர்

அ) ஆர்டிக் ஆலா
ஆ) கடற்கொள்ளைப் பறவை
இ) கடற்காகம்
ஈ) வான் சுறா

22. பறவைகள் பற்றிய படிப்பு.

அ) ஆர்னித்தாலஜி
ஆ) ஆர்க்கியாலஜி
இ) ஆந்தராலஜி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

23. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்

அ) அன்வர் அலி
ஆ) ஹைதர் அலி
இ) சலீம் அலி
ஈ) மஸ்தா

24. சிட்டுக் குருவியின் வீழ்ச்சி என்பது.

அ) பறவைகளின் வரலாறு
ஆ) பறவைகளின் ஆய்வு
இ) பறவைகளின் அழிவு
ஈ) வாழ்க்கை வரலாறு

25. உலக சிட்டுக் குருவி நாள்.

அ) மார்ச் 20
ஆ) மார்ச் 02
இ) மார்ச் 15
ஈ) மார்ச் 19

26. உலகின் நெடுந்தொலைவு பறக்கும் பறவை இனம்.

அ) கடற் காகம்
ஆ) கப்பல்பறவை
இ) ஆர்ட்க் ஆலா
ஈ) இவை அனைத்தும்

27. பறவைகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ முடியாது என்று கூறியவர்.

அ) க்வின்
ஆ) ட்விச்சர்ஸ்
இ) சலீம் அலி
ஈ) மஸ்தா

28. ஆர்ட்டிக் ஆலா எத்தனை கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும்.

அ) 1002 கிலோ மீட்டர்
ஆ) 20000 கிலோ மீட்டர்
இ) 22000 கிலோ மீட்டர்
ஈ) 50000 கிலோ மீட்டர்

29. சலீம் அலி குறித்துப் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ. பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்
ஆ) சிட்டுக்குருவியின் வீழச்சி என்ற தன் வரலாற்று நூல் எழுதியவர்
இ) பறவைகளை கூண்டில் வைத்து காக்க வேண்டும் என்று கூறியவர்
ஈ) இன்றைய பறைவையியல் ஆய்வாளர்களின் முன்னோடி.

30. கீழ்க்கண்டவற்றுள் சிட்டுக் குருவிகளின் அழிவிற்கு காரணமில்லாத ஒன்று.

அ) பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தல்
ஆ) கூடுகட்ட புதர்கள் இன்மை
இ) வேட்டையாடுதல்
ஈ) உணவு கிடைக்காமை

No comments:

Post a Comment