1. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) ஆழிப் பெருக்கு - கடல்கோள்
ஆ) ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
இ) மேதினி - உலகம்
ஈ) உள்ளப்பூட்டு - அறிய விரும்புதல்
2. “ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்” எனத் தமிழைப் பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) இளங்கோவடிகள்
3. பிரித்தெழுதுக - பொய்யகற்று
அ) பொய் + அகற்று
ஆ) பொய் + யகற்று
இ) பொய்மை + அகற்று
ஈ) பொய்ய + கற்று
4. சேர்த்து எழுதுக - எட்டு + திசை
அ) எட்டுத்திசை
ஆ) எட்டுதிசை
இ) எண்திசை
ஈ) எட்டிதிசை
5. ‘பொய்யகற்றும் உள்ளப் பூட்டறுக்கம் - அன்பு,
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்’ என்ற பாடலடிகள் அமைந்த நூல்.
அ) கொய்யாக்கனி
ஆ) பாவியக்கொத்து
இ) கனிச்சாறு
ஈ) நூறாசிரியம்
6. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்.
அ) துரை. மாணிக்கம்
ஆ) இராஜமாணிக்கம்
இ) இராஜம் கிருஷ்ணன்
ஈ) இரா. கிருஷ்ணமூர்த்தி
7. பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர்.
அ) பாவலர்
ஆ) பாவலர் மணி
இ) பாவலரேறு
ஈ) பாவாணர்
8. பெருஞ்சித்திரனார் நூல்களில் பொருந்தாத ஒன்று.
அ) கனிச்சாறு
ஆ) மாங்கனி
இ) கொய்யாக்கனி
ஈ) நூறாசிரியம்
9. பிரித்தெழுதுக - செந்தமிழ்
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செம்மை + தமிழ்
ஈ) செழுமை + தமிழ்
10. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் அல்லாத ஒன்று.
அ) தமிழ்த்தேன்
ஆ) தமிழ்ச்சிட்டு
இ) தமிழ்நிலம்
ஈ) தென்மொழி
11. பெருஞ்சித்திரனாரின் ‘கனிச்சாறு’ எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
அ) ஐந்து
ஆ) எட்டு
இ) பத்து
ஈ) பன்னிரண்டு
12. பெருஞ்சித்திரனாரின் ‘கனிச்சாறு’ என்னும் நூல்,
அ) தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.
ஆ) தமிழர் வீரம் சார்ந்த பாடல்களைக் கொண்டது.
இ) தமிழரின் பண்பாட்டைக் கூறும் பாடல்களைக் கொண்டது.
ஈ) தமிழரின் உறவு முறைகறைக் கூறும் பாடல்களைக் கொண்டது.
13. ‘வான்தோன்றி வளிதோன்றி நெருப்புத் தோன்றி,
மண்தோன்றி மழைதோன்றி மலைகள் தோன்றி’ எனப் பாடியவர்.
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பாரதியார்
இ) பாரதிராசன்
ஈ) வாணிதாசன்
14. ‘கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளம்’ இப்பாடலில் பயின்று வந்திருப்பது.
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அனைத்தும்
15. தமிழ்க்கும்மியில் பெருஞ்சித்திரனார் கூறும் கூற்றுக்களில் பொருந்தாத இணையை கண்டறிக.
அ) பொய் - அகற்றும்
ஆ) உள்ளம் - நிறைக்கும்
இ) மெய் - புட்டும்
ஈ) அறமேன்மை - கிட்டும்
No comments:
Post a Comment